×

மதங்களின் பெயரால் மலைக்க வைக்கும் சொத்துக்கள் உங்கள் பணம் ஆதரவற்றோருக்கா... ஆசிரமங்களுக்கா?

* அஸ்ராம் பாபு: குஜராத் மாநிலத்தில் ஜோத்பூர் உட்பட நாடு முழுக்க இவரது ஆசிரமங்கள் உள்ளன. அறக்கட்டளை என்ற பெயரில் இவர் குவித்த கோடிகள் கணக்கில் அடங்காது; சிஷ்யைகளிடம் பாலியல் சித்ரவதைகள் வேறு; போலீசில் சிக்கிய இவர் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
* ராம் ரஹீம் குர்மித் சிங்: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவருக்கு இந்தியா,  வெளிநாடுகளில் 49 ஆசிரமங்கள் உள்ளன. சொத்துக்கள் பல நூறு கோடிகள். இவரும் பாலியல் விவகாரத்தில் சிக்கி சிறையில் தள்ளப்பட்டார்.
* கல்கி சாமியார்:  ஆந்திர மாநிலம் சித்தூர் வரதய்யபாளையத்தில் அரண்மனை போல ஆசிரமத்தை கட்டி பக்தர்களை வளைத்துப் போட்டவர். சொத்து குவிப்பு, போதைப்பொருள் போன்ற விவகாரத்தில் சிக்கி சமீபத்தில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனையில் 1000 கோடி ரூபாய் சொத்து ஆவணங்களுடன் சிக்கியவர்.
 
நித்யானந்தா உட்பட சர்ச்சையில் சிக்கிய சாமியார்கள், மத போதகர்கள் என்று மத வேறுபாடில்லாமல் சிக்கியவர்கள் பலர் உள்ளனர். சாமியார்கள் - மதபோதகர்கள் - ஆன்மிக தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றி சொத்துக்களை குவிக்கும் போலிகளை அவ்வப்போது பார்த்து வருகிறீர்கள். சிலர் போலீசில் சிக்குகின்றனர்; கம்பியும் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். சொத்துகள்  குவிப்பு, செக்ஸ் விவகாரம் என்று சிக்கினாலும் எந்த கவலையும் இல்லாமல் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்களை நம்பி தங்கள் கஷ்டங்கள் தீர வரும் பக்தர்கள், தங்களின் சொத்துக்களை இழந்தது தான் மிச்சம்; கவலை தீர்ந்தபாடில்லை என்பது நிதர்சனம். மத வேறுபாடில்லாமல் சொத்து குவிக்கும் சாமியார்களால், மதபோதகர்களால் மக்களுக்கு பலன் கிடைத்ததாக தெரியவில்லை; மாறாக இவர்கள் தான் கொழித்து வருகின்றனர்.

ஒவ்வொரு சாமியாரும் போலீசில் சிக்கிய பின்  அவர்களின் ஆசிரமங்களின் சொத்துக்கள் பற்றி தகவல் தெரியும்போது மலைக்க வைக்கிறது.  ஆதரவற்றோருக்கு போக வேண்டிய சாமான்ய மக்களின் நன்கொடை பணம், ஆசிரமங்களில் குவிவது எப்போது நிற்கப்போகிறது? மக்்களின் மனம் மாறப்போவது எப்போது? என்ற ஆதங்கம் பலரிடம் இருக்கத்தான் செய்கிறது. இதோ நான்கு கோணங்களில் விறுவிறுப்பான அலசல்:


Tags : orphans , Assets, your money, orphans or ashrams?
× RELATED மாட்டுத் தொழுவத்தில் குழந்தை பெற்றது...