×

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு எதிரொலி அதானி துறைமுக ரயில் காரிடார் திட்டம் நிறுத்திவைப்பு

சென்னை: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பால் அதானி நிறுவனத்தின் துறைமுக ரயில் காரிடார் திட்டத்திற்கு அனுமதி தருவதில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர்கள் மதிப்பீட்டு குழு பின்வாங்கியது. அதானி துறைமுக நிறுவனத்திற்கு சொந்தமான மரைன் இன்பிராஸ்ட்ரக்சர் டெவலப்பர் நிறுவனம், எண்ணூர் துறைமுகத்தின் அருகே உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ரயில் பாதை அமைக்க திட்டமிட்டது. இந்த திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்று அப்பகுதியை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஈர நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும். வெள்ள நேரத்தில் சென்னையில் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு பல்வேறு கோரிக்கை கடிதங்கள் வந்துள்ளன. இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் கூறும்போது, காட்டுப்பள்ளி துறைமுகத்தில்  பல்வேறு மாஸ்டர் பிளான்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த மாஸ்டர் பிளான்கள் செயல்படுத்தப்படுவதற்கு முன்பே மரைன் இன்பிராஸ்ட்ரக்டர் டெவலப்பர் நிறுவனம் ரயில் பாதை அமைக்கும் திட்டம் குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, கடந்த 2017ல் ரயில் பாதை அமைக்கும் திட்டம் தொடங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த ரயில் பாதை திட்டம் மற்றும் துறைமுகத்திற்கான சாலை போக்குவரத்து திட்டங்களால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கும் என்றும் அதனால், இந்த திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் பொதுமக்களிடம் எதிர்ப்பு எழுந்தது என்றார். இந்நிலையில், ரயில் பாதை அமைக்கும் திட்டம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மதிப்பீடு நிபுணர்கள் குழு கடலோர ஒழுங்கு மண்டலத்திற்கு சில நிபந்தனைகளுடன் கடந்த ஜூலை மாதம் பரிந்துரை செய்தது.

இந்நிலையில், இந்த ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை நிபுணர் குழு நிறுத்தி வைத்துள்ளது. பொதுமக்களின் கருத்துகளுக்கு தரும் முக்கியத்துவம்தான் திட்டம் நிறுத்தப்பட்டதற்கு காரணம் என்று அந்த குழு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை ஒரு முன்மாதிரியாக அதாவது, குறைந்தபட்ச சுற்றுச்சூழல் பாதிப்புடன் செயல்படுத்த  திட்டமிட்டுள்ளதாக நிபுணர் குழு தெரிவித்துள்ளது. மேலும், ரயில் பாதை திட்டம் தொடர்பாக விரிவான செயல் திட்டத்தை தமிழ்நாடு கடலோர மண்டல ேமலாண்மை ஆணையத்திடம் நிறுவனம் தர வேண்டும் என்றும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

Tags : activists ,Adani Port Rail Corridor ,protest , Environmental activists, protest, rail corridor project, suspension
× RELATED கோவில்பட்டியில் இந்தியா கூட்டணி...