×

வேலூர், விழுப்புரம், நெல்லை, காஞ்சியிலிருந்து பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்களுக்கு அதிகாரிகள், ஊழியர்கள் நியமனம்: கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு

சென்னை: வேலூர், விழுப்புரம், நெல்லை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்களுக்கு அதிகாரிகளை நியமனம் செய்வது குறித்து அறிக்கை தருமாறு சம்மந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை என்ற 2 புதிய மாவட்டங்களையும், விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தையும், திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசியை தலைமையிடமாக கொண்டும் புதிய மாவட்டத்தையும் அமைத்து தமிழக அரசு ஆணை வெளியிட்டது.

இதையடுத்து, இந்த புதிய மாவட்டங்களுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போதுள்ள மாவட்ட கலெக்டர்கள் அலுவலகங்களில் இருந்து பணிகளை தொடங்கியுள்ளனர். புதிய மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகங்களை தற்காலிகமாக எங்கு அமைப்பது என்பது குறித்து தனி அதிகாரிகள் அரசுக்கு அனுப்பி வருகிறார்கள். இந்நிலையில், இந்த புதிய மாவட்டங்களுக்கு அதிகாரிகளை நியமனம் செய்வது, பிரதான மாவட்ட கலெக்டர் அலுவலகங்களின் பணியாளர்களிடம் இடமாற்றம் தொடர்பான விருப்ப விண்ணப்பங்கள் ஆகியவை குறித்து அரசுக்கு சம்மந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் அனுப்ப வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Tags : Districts ,Kanchi ,Paddy ,Villupuram ,Vellore ,Govt ,Collectors ,Government , Detached, New Districts, Officers, Collectors, Government, Orders
× RELATED நடப்பு நவரை பருவத்தில் முதற்கட்டமாக 8...