×

செம்மஞ்சேரியில் கிளினிக் நடத்திய போலி டாக்டர் பிடிபட்டார்

துரைப்பாக்கம்: சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில், கடந்த 6 வருடங்களுக்கு மேலாக சாய்ராம் கிளினிக் இயங்கி வந்தது. இந்த கிளினிக்குக்கு, அதே பகுதியை சேர்ந்த சாதிக் (36) என்பவர், காய்ச்சல் காரணமாக நேற்று  முன்தினம் சென்றார். அங்கிருந்த டாக்டர் வெண்மணியிடம் (23) காய்ச்சல் என்று சாதிக் கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு சளி, இருமலுக்கான மருந்து எழுதி கொடுத்து, ஊசி போட வேண்டும் என்று டாக்டர் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சாதிக், ‘’காய்ச்சலுக்காக வந்த என்னை பரிசோதிக்காமலேயே சளி, இருமலுக்கான மருந்து  கொடுக்கிறீர்களே’’ என்று கேட்டுள்ளார்.அதற்கு அந்த டாக்டர், ‘‘நோயாளியை பார்த்த உடனே அவர்களுக்கு என்ன பிரச்னை என எனக்கு தெரிந்துவிடும். நான் சொல்வதை கேளுங்கள்,’’ என கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த சாதிக், ‘‘உங்கள் அடையாள அட்டை மற்றும் பதிவு  எண்ணை காட்டுங்கள்’’ என்று கூறியுள்ளார். அப்போது, முன்னுக்கு பின் முரணாக வெண்மணி பேசியதால், சாதிக் தனது நண்பர்களை அங்கு வரவழைத்தார். அவர்கள் வந்ததும், வெண்மணியின் அடையாள அட்டையை காட்டும்படி வற்புறுத்தினர்.

உடனே அடையாள அட்டையை காட்டினார். அதில், வெண்மணி என்பதும், பெரும்புதூரில் உள்ள ஆயுர்வேதா மருத்துவ கல்லூரியில் படித்து வருவதும் தெரிந்தது. சொந்த ஊர் கும்பகோணம். பெரும்புத்தூர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து  வருவதும், போலி மருத்துவர் என்பதும் தெரிந்தது.இதையடுத்து, காவல் கட்டுபாட்டு அறையில் சாதிக் புகார் செய்தார். செம்மஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, வெண்மணியிடம் விசாரித்தனர். இதில், நாளொன்றுக்கு ₹800 சம்பளத்திற்கு ஸ்ரீபெரும்புத்தூரிலிருந்து இங்கு  வந்துள்ளதும், இந்த கிளினிக்கில் உள்ள மருத்துவர் தலை தீபாவளியை கொண்டாடுவதற்காக சொந்த ஊரான கும்பகோணம் சென்றிருப்பதும் தெரியவந்தது. சாதிக், கொடுத்த புகாரை தொடர்ந்து, கும்பகோணத்துக்கு சென்றுள்ள சாய்ராம் மருத்துவமனையின் மருத்துவர் மணிவேலை, விசாரணைக்காக செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். இதற்கிடையில், போலீசார் வழக்கு பதிவு  செய்து வெண்மணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : doctor ,seminary clinic ,clinic ,Chemmanjeri The Fake Doctor , Conducted, Clinic , Chemmanjeri, fake doctor ,caught
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...