×

82வது பட்டம் வென்று டைகர் வுட்ஸ் அசத்தல்

டோக்கியோ: ஜப்பானில் நடைபெற்ற ஸோஸோ கோல்ப் தொடரில் அமெரிக்க நட்சத்திரம் டைகர் வுட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை காரணமாக ஓய்வெடுத்து வந்த டைகர் வுட்ஸ் (43 வயது), நீண்ட இடைவெளிக்குப் பிறகு களமிறங்கிய ஸோஸோ பிஜிஏ தொடரில் முதலிடம் பிடித்தார். இது அவர் வென்ற 82வது பிஜிஏ சாம்பியன்  பட்டமாகும். இதன் மூலமாக 1965ல் அமெரிக்காவின் சாம் ஸ்னீட் படைத்த சாதனையை (82 பட்டங்கள்) வுட்ஸ் சமன் செய்துள்ளார்.



Tags : Tiger Woods , Tiger Woods won , 82nd ,title
× RELATED அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர்...