10வது முறையாக பட்டம் வென்றார் ரோஜர் பெடரர்

பாசெல்: சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் தொடரில், நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் 10வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் (20 வயது, 18வது ரேங்க்) மோதிய பெடரர் (38 வயது, 3வது ரேங்க்) 6-2, 6-2 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று கோப்பையை முத்தமிட்டார். சொந்த மண்ணில்  உள்ளூர் ரசிகர்கள் முன்பாக பெற்ற இந்த சாதனை வெற்றியால் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட பெடரர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். ஒரே தொடரில் 10 முறை சாம்பியன் பட்டம் வெல்லும் சாதனையை அவர் 2வது முறையாக நிகழ்த்தியுள்ளார்.  முன்னதாக, ஜெர்மனியில் நடைபெறும் ஹாலே தொடரில் அவர் 10 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரான்சில் நடைபெறும் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக பெடரர் நேற்று அறிவித்தார்.

Related Stories:

>