×

நாடு முழுவதும் கும்பல் தாக்குதல் அதிகரிப்பு கவலையளிக்கிறது: ராஜஸ்தான் முதல்வர் கருத்து

ஜெய்ப்பூர்: ‘‘நாடு முழுவதும் கும்பல் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது’’ என ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலாட் கூறியுள்ளார். பசுக்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வடமாநிலங்களில் பசுவதை புரிவோருக்கு எதிராக, பசு காவலர்கள் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால்,  பசு திருடர்கள் என சந்தேகித்து சிலர் மீது இந்த அமைப்பினர்  தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
 இந்நிலையில், ராஜஸ்தானில் ஹிங்கோனியா கோசாலைக்கு வந்திருந்த அந்த மாநில முதல்வர் அசோக்கெலாட்டிடம், மேற்கண்ட தாக்குதல்கள் குறித்து கேள்வி  எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது: பசு தாய் போன்றது. ஒவ்வொரு இந்துவும் பசுவை தாயாக கருத வேண்டும். இந்த உணர்வுகளை நாம் மதிக்க வேண்டியது கடமை. அதேநேரத்தில், சந்தேகத்தின் பெயரால் தாக்கப்பட்டு சிலர் கொல்லப்படுகின்றனர். நாடு முழுவதும் இத்தகைய  தாக்குதல்கள் அதிகரிப்பது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. இந்த தாக்குதல்கள் தடுக்கப்பட வேண்டும். இதற்கான அனைத்து முயற்சிகளையும் மாநில அரசு மேற்கொள்ளும்.  இவ்வாறு தாக்குதல் நடத்துவோர் சமூக விரோதிகள் என்பதை  பதிவு செய்ய வேண்டியது பாஜ தலைவர்களின் கடமை. இவ்வாறு செய்தால் இத்தகைய தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



Tags : mob attack ,country ,Rajasthan ,CM , All, country, attack, Rajasthan CM ,opinion
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!