×

பாஜவுக்கு எதிராக செயல்பட மாட்டோம்: முன்னாள் முதல்வர் குமாரசாமி அறிவிப்பு

பெங்களூரு: வெள்ளம் பாதிக்கப்பட்ட பெலகாவி உள்ளிட்ட  பகுதிகளில் ஆய்வு  மேற்கொண்ட குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:வெள்ளம் மற்றும்  வறட்சி காரணமாக மக்கள் துன்பத்தை சந்தித்து வருகிறார்கள். மக்களுக்கு  நிவாரணம் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு அரசு இருக்க வேண்டியது  அவசியமாகும். தற்போது பாஜ ஆட்சி இருந்தாலும் நிவாரண பணிகள்  மந்தமாகவே  நடக்கின்றன.

மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே என்னுடைய   நோக்கமாகும்.  காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தபோது இதை முன்னிட்டே முதல்வராக  பணியாற்றினேன். கூட்டணி ஆட்சி கவிழ்ந்தபோது  மண்டியாவில் நடந்த  பொதுக்கூட்டத்தில் அரசியலில் இருந்தே விலகி விடும் மனநிலையில் இருந்தேன்.  மக்களுக்கு நன்மை கிடைக்கவேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு சேவையாற்றிட  வேண்டும் என்பதற்காகவே இதுவரை அந்த  முடிவை எடுக்கவில்லை. தற்போதுள்ள  நிலையில் பாஜ ஆட்சிக்கு எதிராக எதுவும் செய்யப்போவதில்லை. ஆட்சியை  கவிழ்க்கவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்.


Tags : Baja ,CM Kumaraswamy , Against Baja, act, Former CM, Kumaraswamy ,announces
× RELATED பக்தர்கள் கடும் எதிர்ப்பு எதிரொலி பாஜ...