×

மது அருந்திய 13 விமான ஊழியர்கள் சஸ்பென்ட்: விமான போக்குவரத்து இயக்குனரகம் நடவடிக்கை

புதுடெல்லி: மது பரிசோதனையின் போது, போதையில் இருந்த விமான ஊழியர்கள், விமான நிலைய ஊழியர்கள் 13 பேரை, 3 மாதங்கள் சஸ்பென்ட் செய்து விமான போக்குவரத்து இயக்குனரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.இந்திய விமானப் போக்குவரத்து இயக்குனரக விதிகளின்படி விமான ஊழியர்கள், விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களை மது பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும். இதனை  இயக்குனரகம் அவ்வபோது அதிரடி சோதனைகள் நடத்தி உறுதி செய்வது வழக்கம்.இந்நிலையில், விமான போக்குவரத்து இயக்குனரகம் நேற்று வழக்கமான அதிரடி சோதனையில் இறங்கியது. இதில், பல்வேறு விமான நிறுவனங்கள், விமான நிலைய ஊழியர்கள் என 13 பேர் மது போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  மேலும், அவர்கள் கடந்த செப்டம்பர் 16ம் தேதி முதல் மது பரிசோதனை செய்யாமல் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 13 பேரும் மூன்று மாதங்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `இண்டிகோ நிறுவனத்தை சேர்ந்த 7, கோ ஏர், ஸ்பைஸ் ஜெட்டை சேர்ந்த தலா ஒருவர், பெங்களூரு, டெல்லி சர்வதேச விமான நிலையங்களில் பணிபுரியும் 3 ஊழியர்கள் உள்பட  மொத்தம் 13 பேர் மூன்று மாதங்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.விமானப் போக்குவரத்து இயக்குனரக விதிகளின்படி, முதல் முறை 3 மாதம் சஸ்பென்ட் செய்யப்படும் இவர்கள், மீண்டும் தவறு இழைக்கும் பட்சத்தில் ஒரு வருடம் சஸ்பென்ட் செய்யப்படுவார்கள்.

Tags : aviation staff ,Aviation Directorate ,Airline employees , Drinking wine, 13 Airline, employees ,suspended
× RELATED கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி: சீனா...