×

குஜராத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை

அகமதாபாத்: அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள `க்யார்’ புயல் வலுவிழந்து ஓமன் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குஜராத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை  ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மும்பை மேற்கு-தென்மேற்கு பகுதியில் இருந்து 830 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள க்யார் புயல், நாளை மறுநாள் வரை மேற்கு-வடமேற்கு நோக்கி மெதுவாக நகரும். நேற்று மாலை வரை கடும் புயலாக இருந்த இது மெல்ல  வலுவிழந்து ஒமன் நாட்டை நோக்கி செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 5 நாட்களுக்கு குஜராத்தில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Gujarat , Next , Gujarat Rain ,5 days
× RELATED பாஜவுக்கு வாக்களிக்க மக்களுக்கு...