×

இரண்டாவது முறையாக தோண்டிய பள்ளத்தில் ஏணி மூலம் தீயணைப்பு வீரர் இறங்கி ஆய்வு: ஆய்விற்கு பின் வெளியேறினார் வீரர் திலிப்குமார்

சென்னை: ரிக் இயந்திரம் தோண்டிய 55 அணடி ஆழ்துளைக்குள் ஏணி மூலமாக தீயணைப்பு வீரர் திலிப்குமார் இறங்கி உள்ளார். 55 அடிக்குக் கீழே பாறையின் தன்மையை ஆய்வு செய்ய தீயணைப்பு வீரர் திலிப்குமார் இறங்கி உள்ளார். முதகில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டு ஆழ்துளை கிணற்றுக்குள் தீயணைப்பு வீரர் தீயணைப்பு வீரர் இறங்கி உள்ளார். முழு பாதுகாப்பு கருவியுடன் அனுபவம் பெற்ற வீரர் ஆழ்துளைக்குள் இறங்கியுள்ளார். குறிப்பிட்ட நேரத்தில் தீயணைப்பு வீரர் மேலே வரவிட்டால் கணிறு மூலம் மேலே தூக்கிவிட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது. 55 அடிவரை தோண்டப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர் திலிப்குமார் ஆய்வு செய்த பின் மேலே வந்தார். உள்ளே உடைப்பட்ட பாறைகளின் பாகங்கள் உள்ளதாக ஆய்வில் தீயணைப்பு வீரர் தெரிவித்துள்ளார். உடைபட்ட பாறைகளை வெளியே கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழிக்குள் பிளவுபட்டு கிடந்த அடர்த்தியான பாறைகளை வெளியே எடக்க கிரேன் பயன்படுத்தப்படுகிறது. குழந்தையை பத்திரமாக மீட்பதற்காக பல்வேறு இடங்களில் பிரார்த்தனைகள் நடந்து வருகிறது. மீட்பு பணி நடைபெறும் இடத்தில் அவ்வபோது மழை பெய்வதால் தொய்வு ஏற்படுகிறது. பல இடையூறுகள் இருந்த போதிலும் மீட்பு பணி தொடர்கிறது.

குழந்தை சுவாசிப்பதற்கு ஏற்றார் போல், தொடர்ந்து ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆழ்துளை கிணற்றின் அருகே குழி தோண்டும் பணியும் தொடங்கப்பட்டது. ஆனால், கடின பாறைகள் இருந்ததால் அதிலும் சிக்கல் ஏற்பட்டது. குழந்தை பயப்படாமல் இருக்க, குழிக்குள் விளக்கும், கண்காணிப்பதற்கு கேமராவும் பொருத்தப்பட்டது. ஒவ்வொரு முயற்சியின் போதும் தோல்வியுற்று, குழந்தை சில அடிகள் கீழிறங்கியதால் 20 அடியில் சிக்கிய குழந்தை 82 அடிக்கும் கீழ் சென்றான். தற்போதைய நிலையில், குழந்தை மயக்கமடைந்து அசைவற்ற நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் 98 அடி ஆழத்திற்கு தோண்டியப்பின் பக்கவாட்டில் ஒரு நபர் சென்று வருவதற்கு ஏற்றார்போல் துளையிட்டு குழந்தை மீட்கப்படும் என கூறப்படுகிறது. இதற்காக 7 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர்.Tags : firefighter ,Dilipkumar ,bus depot , Additional ,special buses ,paddy field ,the bus bus depot
× RELATED பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது: காயமடைந்த...