×

தூத்துக்குடி - பெங்களூரு விமான சேவை தொடங்கியது

புதுக்கோட்டை: பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு புதிய விமான சேவை (இண்டிகோ) துவங்கியது. புதிய விமானத்திற்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பளிக்கப்பட்டது. தென்மாவட்டங்களில் மதுரைக்கு அடுத்தபடியாக தொழில் நகரமான தூத்துக்குடியில் தான் விமான நிலையம் உள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து தினமும் 5 முறை சென்னைக்கு  சிறிய ரக விமானம் இயக்கப்படுகிறது. இந்நிலையில் புதிதாக பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு அதிகாலை 6.50 மணிக்கும், தூத்துக்குடியில் இருந்து பெங்களூருக்கு 7.30 மணிக்கும் நேற்று முதல் விமான சேவை துவங்கப்பட்டது புதிய விமான சேவை வருகையை முன்னிட்டு விமான நிலைய தீயணைப்பு இயந்திரங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு வழங்கப்பட்டது. இந்த விமானத்தில் 78 பயணிகள் பயணிக்கலாம். பெங்களூருவில் இருந்து 78 பயணிகளுடன் தூத்துக்குடிக்கு வந்த விமானத்தில் மறுமார்க்கமாக பெங்களூருக்கு 12 பயணிகள் தங்களது பயணத்தை துவங்கினர். தூத்துக்குடியில் இருந்து ஒரு மணி நேர பயணத்தில் பெங்களூருவை சென்றடையும்..

இந்த சேவையை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விமான நிலைய இயக்குனர் என்.சுப்ரமணியன் கூறுகையில், தூத்துக்குடி விமான நிலையத்தின் ஓடு தளத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கிவிட்டன. இதன் பின்னர் இரவு நேர விமான சேவை தொடங்கும். விமானநிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்துவதற்காக நிலம் தமிழக அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளன. விரிவாக்கத்திற்கு விமான நிலைய ஆணைய தலைவரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், விரிவாக்க பணி தொடங்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த பணிகள் முடிவடைந்த பின் ஒரு நேரத்தில் 300 பயணிகள் வரவும், செல்லவும் ஏற்ற விமானங்கள் இயக்கப்படும்.’’ என்றார்.

Tags : Tuticorin ,Bangalore ,airline service , Tuticorin , Bangalore, air service,started
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...