×

அஞ்செட்டி அருகே உடல்நலக் குறைவால் பெண் யானை இறந்தது

தேன்கனிக்கோட்டை: அஞ்செட்டி அருகே கடந்த ஒரு வாரமாக நோயால் பாதிக்கப்பட்ட யானை சிகிச்சை பலனின்றி இறந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனச்சரகம் குந்துக்கோட்டை அருகே பஜனகரை ஏரி என்ற பகுதியில் கடந்த ஒரு வாரமாக 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று நோயால் பாதிப்படைந்து கூட்டத்தில் இருந்து பிரிந்து உணவு உட்கொள்ள முடியாமல் நின்று கொண் டிருந்தது. இதுகுறித்து அஞ்செட்டி வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் தீபக் பில்ஜி உத்தரவின்பேரில் அஞ்செட்டி வனச்சரக அலுவலர் ரவி, வனவர் வடிவேலு மற்றும் வனகுழுவினர் நோயால் பதிப்படைந்த யானையை பார்வையிட்டனர். யானை முதுமை மற்றும் நோயால் பாதிப்படைந்து உணவு உட்கொள்ள முடியாமல் உடல் மெலிந்து காணப்பட்டது தெரிந்தது.

இதையடுத்து கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். உணவு மூலம் மருந்து மாத்திரை வழங்கி கண்காணித்து வந்தனர். ஆனால் முதுமை மற்றும் நோயால் பாதிப்படைந்த யானை உணவு உட்கொள்ள முடியாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று மதியம் யானை இறந்தது. வனத்துறை கால்நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்து ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டி புதைத்தனர்.



Tags : Anjetti , Female elephant,died ,ill health , Anjetti
× RELATED வத்தல்மலை அடிவாரத்தில்...