×

தீபாவளி போதையால் விபத்தில் சிக்கிய வாலிபர்கள்

அம்பை: தீபாவளி பண்டிகை என்றாலே புது துணி மற்றும் வித விதமாக பட்சணங்கள் செய்து சாப்பிடுவது, வெடிகள் பொட்டு மகழ்வதை மட்டன், சிக்கன் என விரும்பியதை ஒரு கைபார்ப்பதை அறிந்திருக்கிறோம். ஆனால் மதுப்பிரியர்களுக்கு இதுபோன்ற பண்டிகை என்றாலே இரட்டிப்பு மகிழ்ச்சிதான். காரணம் அவர்கள் மனம்போல் போதையில் மிதப்பார்கள். பண்டிகை காலங்களில் அளவுக்கு மீறி மது குடிப்பது சகஜம்தான். ஆனால் அதுவே விபத்தில் முடிந்தால் என்னவாகும்? இதுபோன்ற நிகழ்வுகள் நேற்று அம்பையில் பல இடங்களில் நடந்துள்ளது. குடித்து விட்டு பைக்கில் நண்பர்கள் மற்றும் தியேட்டர்களில் படம் பார்க்க சென்ற சில வாலிபர்கள் செல்லும்போது தவறி கீழே விழுந்துள்ளனர். இதில் காயமடைந்த அவர்களை அப்பகுதியில் உள்ளவர்கள் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றுள்ளனர். ஆனால் காயம்பட்ட வாலிபர்கள், போலீசிற்கு தெரிந்தால் கேஸ் போட்டு நம்மை அலையவைத்து விடுவார்கள் என எண்ணி  நேராக தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றிருக்கிறார்கள்.

அம்பை பகுதியில் மட்டுமின்றி பல இடங்களில் இதுபோன்று குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் விபத்தில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. ஜாலியாக கொண்டாட வேண்டிய பண்டிகையை அவர்ள் ரணவேதனைக்கு ஆளாக்கி விடுகிறது. இவர்களை ஏதோ காயத்துடன் தப்பி விட்டார்கள். ஆனால் நெல்லை அருகே பிராஞ்சேரி குளத்தில் வாலிபர் ஒருவர் நேற்று அளவுக்கு மீறி குடித்து விட்டு நீரில் மூழ்கி உயிரை இழந்துள்ளார். இதனால் அந்த குடும்பத்திற்கு எத்தனை சோகம். குடிபோதையில் மிதப்பவர்கள் தங்கள் குடும்பத்தை சற்று எண்ணி பார்க்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள்.



Tags : Veterans ,poisoning accident ,Diwali , Veterans , injured ,Diwali ,poisoning,accident
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...