×

பைக்கை வழிமறித்து கும்பல் வெறிச்செயல் ஐசிஎப் ஊழியர் வெட்டிக் கொலை: கொளத்தூரில் பயங்கரம்

பெரம்பூர்: ஐசிஎப் ஊழியர் சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை வில்லிவாக்கம், ராஜமங்கலம் 7வது தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன் (58). இவர் ஐசிஎப்பில் எலக்ட்ரிஷினியாக பணிபுரிந்து வந்தார். ஐசிஎப் அண்ணா தொழிற்சங்கத்தின் பொருளாளராகவும் ஐசிஎப் கூட்டுறவு சங்க இயக்குனராகவும் இருந்தார். இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு தினேஷ்குமார், நந்தகுமார் என்ற 2 மகன்கள் உள்ளனர்.நேற்று இரவு நண்பருடன் கொளத்தூர் ஜிகேஎம் காலனி 31வது தெரு வழியாக  பைக்கில் வீட்டுக்கு சென்றபோது அங்கு வந்த 3 பேர், ஜானகிராமனின் பைக் மீது மோதினர். அவர் தடுமாறி கீழே விழுந்ததும் ஜானகிராமனை சரமாரி வெட்டிவிட்டு கும்பல் சென்றது. ஜானகிராமனுடன் வந்த நண்பர் லேசான காயங்களுடன் ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரவள்ளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.  அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜானகிராமனை மீட்டு உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஜானகிராமன் பரிதாபமாக உயிரிழந்தார். புளியந்தோப்பு சரக துணை ஆணையர் சாய்சரண் தேஜஸ்வி மற்றும் உதவி ஆணையர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் ஜானகிராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட ஜானகிராமன், வில்லிவாக்கத்தில் உள்ள இளங்காளியம்மன் கோயிலில் செயலாளராக பணியாற்றினார். கோயிலில் 3 ஊழியர்கள் சரிவர வேலை செய்யவில்லை என்று கூறி அவர்களை ஜானகிராமன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள், ஜானகிராமனை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

Tags : ICF ,death , ICF ,employee,killed ,bike tragedy
× RELATED 250 ரயில்வே ஊழியர்கள் கைது