×

திருவள்ளூரில் நாளை குரு பெயர்ச்சி யாகம்: கவர்னர் பங்கேற்கிறார்

திருவள்ளூர்: திருவள்ளூர், பூங்கா நகர், ஸ்ரீ யோக ஞான தட்சிணாமூர்த்தி பீடத்தில் நாளை (29ம் தேதி) அதிகாலை 3.42 மணயளவில் குரு பெயர்ச்சி விழா நடக்கிறது. ஸ்ரீ குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.  இதையொட்டி இந்த குரு ஸ்தலத்தில் பரிகார மஹாயாகம் 108 ஹோம திரவியங்களை கொண்டு நடக்கிறது. மேலும் குரு பகவானுக்கு 108 லிட்டர் பால் அபிஷேகமும் விசேஷ அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.

இதையொட்டி நள்ளிரவு 1 மணியளவில் அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீ சுக்த ஹோமம்,  லக்ஷ்மி ஹோமம், ஸ்ரீ காளி ஹோமம், நவகிரக ஹோமம்,  யோக ஞான தட்சிணாமூர்த்தி அஸ்தர ஹோமம், மூலமந்த்ர ஹோமம் 2.30 மணியளவில் மகா பூர்ணாஹூதி, அதிகாலை 3 மணியளவில் 108 லிட்டர் பாலாபிஷேகம், 3.42 மணியளவில் யோக தக்ஷிணாமூர்த்தி பெயர்ச்சி அடையும் நேரத்திற்கு மஹா தீபாராதனையும் நடக்கிறது. விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகர் வெங்கட்ராம சிவாச்சாரியார் செய்து வருகிறார்.

Tags : Parishi Yagam ,Thiruvallur ,Guru Parishi Yagam , Guru Parishi, Yagam , Thiruvallur ,tomorrow
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்