×

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 28 பேர் கொண்ட குழு காஷ்மீரில் நாளை ஆய்வு

டெல்லி  :ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 28 பேர் கொண்ட குழு காஷ்மீரில் நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து ரத்து

இந்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி அன்று விதி எண் 370 ஐ விலக்கிக் கொண்டு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.  அதையொட்டி கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.   பல அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். தொலை தொடர்பு மற்றும் இணையச் சேவை முடக்கப்பட்டது.

தற்போது லாண்ட் லைன் தொலைபேசி மற்றும்  போஸ்ட் பேய்ட் அலைப்பேசி சேவைகள் அளிக்கப்பட்டுள்ளன.  பல இடங்களில் 144 தடை சட்டம் இன்னமும் அமலில் உள்ளது.  தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.  ஆனால் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தியின் மகள் இல்திஜா இதை கடும் பொய் என மறுத்துள்ளார்.

காஷ்மீரில் நாளை நேரில் ஆய்வு

இந்நிலையில் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பாராளுமன்றக் குழு ஒன்று இந்தியாவுக்கு இன்று வந்துள்ளது.   இன்று மதியம் அந்த குழுவின் 28 உறுப்பினர்கள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும்  பிரதமர் மோடி ஆகியோரை நேரில் சந்தித்து பேசியுள்ளனர். காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு, 370வது சிறப்பு அந்தஸ்து நீக்கம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி மற்றும் அஜித் தோவல் ஆகியோரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது. காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து குழுவிடம் விவரித்துள்ளனர்.   

எனினும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 28 பேர் கொண்ட குழு காஷ்மீரில் நாளை நேரில் பார்வையிட உள்ளனர். அப்போது காஷ்மீர் நிலவரம் குறித்து ஐரோப்பிய எம்.பி.க்கள் குழுவினருக்கு இந்திய அதிகாரிகள் விளக்கம் அளிப்பர். பொதுமக்களை சந்தித்து காஷ்மீரில் உள்ள நிலவரம் குறித்து கேட்டறிய உள்ளனர். இதனிடையே டெல்லி வந்துள்ள ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த எம்பிக்கள் குழுவை வரவேற்று பிரதமர் மோடி பேசினார். அப்போது தீவிரவாதிகளை ஆதரிக்கும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.


Tags : lawmakers ,European ,Kashmir ,delegation , European Union, Prime Minister Modi, Ajit Dowal, Kashmir, extremists
× RELATED சில்லிபாயின்ட்..