×

போர்வெல் நிறுவனங்கள் கேஸ்டிங்க் குழாய் பொறுத்தாததே ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழ காரணம்: ரிக் உரிமையாளர் சங்கம்

சென்னை: தனியார் போர்வெல் நிறுவனங்கள் கேஸ்டிங்க் குழாய் பொறுத்தாததே ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழ காரணம் என ரிக் சம்மேளனம் குற்றம் சாட்டியுள்ளது. கேஸ்டிங்க் குழாய் என்பது ஆழ்துளை கிணற்றில் மண் சரிவதை தடுக்கும் என தமிழ்நாடு ரிக் உரிமையாளர் சம்மேளன தலைவர் கந்தசாமி விளக்கமளித்துள்ளார். அரசு அமைக்கும் ஆழ்துளை கிணறுகளில் கேஸ்டிங்க் குழாய் பொறுத்தப்படுவதாகவும், தனியார் அதனை பின்பற்றுவதில்லை என்றும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, போர்வெல் நிறுவனங்கள் கேஸ்டிங்க் குழாய் பொறுத்த அரசு சட்டம் இயற்ற வேண்டும் என ரிக் உரிமையாளர் சம்மேளனம் கோரிக்கை வைத்துள்ளது.

Tags : Borewell companies ,companies ,Borewell , Borewell Companies, Casting Pipe, Children, Rick Owners Association
× RELATED சட்டமன்ற தேர்தல் அறிக்கையில்...