×

கேரளாவின் பாலக்காடு வனப்பகுதியில் தண்டர் போல்ட் போலீஸ் நடத்திய தாக்குதலில் 3 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

கோவை,- பாலக்காடு அருகே மலைப் பகுதியில் பதுங்கியிருந்த 3 மாவோயிஸ்ட்களை போலீசார் இன்று சுட்டுக் கொன்றனர். கேரள மாநிலம் வயநாடு, பாலக்காடு உள்ளிட்ட வனப்பகுதி மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகமான பகுதியாகும். அவர்கள் அவ்வப்போது ஆதிவாசி கிராமங்களுக்குள் புகுந்து கூட்டம் நடத்தி மக்களை அரசுக்கு எதிராக திசை திருப்புவார்கள்.மேலும் அதிகாரிகளை கடத்தி செல்வது, துப்பாக்கி சண்டை போன்ற பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இந்தியாவில் உள்ள 30 மாவட்டங்களுக்கு மாவோயிஸ்ட்டுகளால் ஆபத்து ஏற்பட உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.இதில் கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு மாவோயிஸ்டுகளால் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறை கேரள அரசுக்கு தகவல் அனுப்பியது.

இந்நிலையில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மஞ்சக்கட்டி மலைப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாககேரள அதிரடிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை 50 போலீசார் அவர்களை பிடிக்க துப்பாக்கியுடன் சென்றனர். மலைப்பகுதிக்கு போலீசார் வந்ததையறிந்த மாவோயிஸ்ட்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசாரும் சுட்டனர். சுமார் ஒரு மணி நேரம் சண்டை நீடித்தது.

 மாவோயிஸ்டு எதிர்ப்பு பிரிவான தண்டர் போல்ட் போலீஸ் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு உள்ளனர்.  நீண்ட நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையின் முடிவில்,  3 மாவேயிஸ்ட்கள் இறந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டது. இறந்து போன மாவேயிஸ்ட்கள் யார் என விரைவில் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று பகுதியில் வேறு ஏதேனும் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா என பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்....

Tags : Maoists ,Thunder Bolt ,forest ,police attack ,Palakkad ,Kerala 3 Maoists , Palakkad, Maoist, Murder, Thunder Bolt, Forest
× RELATED வயநாடு தொகுதி மக்களை...