×

கலிபோர்னியாவில் மிக மோசமான அளவில் காட்டுத் தீ ஏற்பட்டதைத் தொடர்ந்து அவசர நிலை பிரகடனம்

கலிபோர்னியா: கலிபோர்னியாவில் மிக மோசமான அளவில் காட்டுத் தீ ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கலிப்போர்னியா கவர்னர் கவின் நியூசம் கூறும்போது, கலிப்போர்னியாவில் கடுமையாக காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த மாகாணத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனைத் தொடர்ந்து மக்கள் பாதுகாப்புக்காக அங்கு அவசர நிலை பிரகனடப்படுத்தி உள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்களை உடனடியாக வெளியேற்றும் நடவடிக்கையில் மீட்புப் படையினர் இறங்கி உள்ளனர். காட்டுத் தீயை கூடிய விரைவில் கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அவர்கள் இருப்பிடத்திலிருந்து வெளியேறி உள்ளனர் என்றும் சோனா நகரில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக சுமார் 30,000க்கும் அதிகமான நிலங்களில் தாவரங்கள் எரிந்து நாசமாகி உள்ளதாக கலிப்போர்னியா கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தின் வடக்குப் பகுதியில் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஏற்பட்ட காட்டுத் தீக்கு 84 பேர் பலியாகினர். மேலும் சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் தீக்கிரையாகின. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் நெருப்பில் நாசமாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : wildfire ,California , California, worst, wild fire, state of emergency, declaration
× RELATED கலிஃபோர்னியா: ஒட்டுமொத்த நகரையே பனியில் மூழ்கவைத்த பனிப்புயல்!