×

சிவகங்கையில் மருதுபாண்டியர் சிலை நிறுவ அனுமதி மறுத்ததால் கல்வீசி தாக்குதல்: போலீசார் தடியடி

சிவகங்கை: சிவகங்கை அருகே எந்தவித அனுமதியின்றி மருதுபாண்டியர் சிலையை நிறுவ முயன்றவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். சிவகங்கை அருகே நேற்று காளையார் கோவிலில் மருதுபாண்டியரின் 218வது குருபூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்க மதுரையில் இருந்து வந்த சிலர் சிவகங்கை தெப்பக்குளம் அருகே மருது சகோதரர்கள் சிலைகளை நிறுவ ஏற்பாடு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து டி.எஸ்.பி., முகமது கபூர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். எந்தவித அனுமதியும் இன்றி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியை நிறுத்துமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். எஸ்.பி., ரோஹித்நாதன் தலைமையில் வந்த போலீசார் சிலையை அகற்ற முயன்றனர். அப்போது போலீசாருக்கும் அங்குள்ளவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் சிலை வைக்க முயன்றவர்கள் போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்கினர். தொடர்ந்து  போலீசார் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கவும், கல்வீச்சில் ஈடுபட்டவர்களை தடுக்கும் நோக்கில் அவர்கள் மீது தடியடி நடத்தி விரட்டினர். தடியடி நடத்தப்பட்டதால் அப்பகுதியே போர்க்களம் போன்று காட்சியளித்தது. இந்த சம்பவத்தில் காவலர்கள் 5 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து அங்கு  பதற்றம் ஏற்பட்டு வருவதால் 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதன் எதிரொலியாக காளையார் கோவிலிலும் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கும் வண்ணம் அப்பகுதியில் 1,650 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Tags : attack ,Marudha Pandiyar ,Sivaganga , Sivagangai, Maruthupandiyar statue, clearance, education, attack, rod
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...