×

கடினமான பாறைகளை ரிக் இயந்திரத்துக்கு பதில் போர்வெல் மூலம் துளையிடும் பணி தொடங்கியது

மணப்பாறை: கடினமான பாறைகளை ரிக் இயந்திரத்துக்கு பதில் போர்வெல் மூலம் துளையிடும் பணி தொடங்கியது. கடினமான பாறைகளை ரிக் இயந்திரத்திற்கு பதிலாக போர்வெல் இயந்திரம் மூலம் உடைத்து துளையிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

67 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் மீட்கும் பணி

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி, 67 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி தொடங்கி நடைபெற்றது. குழி தோண்டும்போது பாறைகள் இருந்ததால் அப்பணியில் சிறிது தொய்வும் ஏற்பட்டது.

*25ம் தேதி மாலை 4மணிக்கு குழந்தை சுஜித் ஆழ்துளை கிணறு குழியில் விழுந்தான்.அப்போது குழந்தை 5 அடி ஆழத்தில் இருந்தது.

*தாசில்தார் தமிழ்க்கனி தலைமையில் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வருகை புரிந்ததையடுத்து
ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டும் பணி தொடங்கியது.

*அன்று இரவு அதிர்வால் குழந்தை தொடர்ந்து குழிக்குள் இறங்கிக்கொண்டே இருந்ததால் பள்ளம் தோண்டுவது நிரந்தரமாக நிறுத்தம் செய்யப்பட்டது.

*26ம் தேதி நாமக்கல், கொத்தமங்கலம் குழுவினர் மாறி மாறி கயிறு மூலம் சுருக்கு ஏற்படுத்தி மீட்க முயற்சி செய்யப்பட்டது. எனினும் மதியம் 2 மணி அளவில் குழந்தை சுஜித் 70 அடிக்கு சென்றான்.

*பிறகு 80 அடி ஆழத்துக்கு ஆழ்துறை கிணறு அமைத்து மீட்க முடிவு செய்து பணிகள் தொடங்க இருந்த நிலையில் குழந்தை 88 அடிக்கு சென்றது.

*அரியலூரிலிருந்து ரிக் இயந்திரம் வந்தது. சுரங்கம் தோண்டும் பணி தொடங்கப்பட்டது.தேவிபட்டினத்திலிருந்து ஏற்கனவே வந்த இயந்திரத்தை விட 3 மடங்கு சக்தி கொண்ட ரிக் இயந்திரம் வந்தது. அவ்வப்போது பழுதான நிலையில் பழுது நீக்கி பணிகள் விடிய விடிய தொடர்ந்தது.

*குழந்தை உள்ள ஆழ்துளை கிணறு அருகே இதுவரை 45 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

*முதல் ரிக் இயந்திரம் மூலம் 35 அடியும், 2வது ரிக் இயந்திரம் மூலம் 10 அடியும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

*பாறையில் துளையிடும்போது, ராக் டிரில்லிங் உபகரணத்தில் பழுது ஏற்பட்டதால் ஆழ்துளை அமைக்கும் பணி சற்றுநேரம் நிறுத்தப்பட்டு புதிய ரிக் எந்திரம் மூலம் துளையிடும் பணி முன்னெடுக்கப்பபட்டது.

*பழுதடைந்த உபகரணத்திற்கு பதிலாக ராக் டிரில்லிங் மிஷின் மாற்றப்பட்டது. ஆழ்துளை அமைக்கும் தனியார் நிறுவன காஞ்சிபுரம் அலுவலகத்தில் இருந்து எடுத்து வரப்பட்டது.ரிக் எந்திரத்தில் புதிய டிரில்லிங் உபகரணம் பொருத்தப்பட்டு பணி மீண்டும் தொடங்கியது.

* 2வது ரிக் எந்திரத்தில் போல்ட் பழுதடைந்திருப்பதால் துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டது. னால் மாற்று பாகங்கள் தயார் நிலையில் இருப்பதால் விரைவில் தோண்டும் பணி தொடங்கும் எனத் தெரிகிறது.

போர்வெல் இயந்திரம் மூலம் துளையிட முடிவு

*இந்நிலையில் ரிக் இயந்திரத்திற்கு பதில், போர்வெல் இயந்திரம் மூலம் துளையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. பாறைகளை உடைக்க போர்வெல் எளிதாக இருக்கும் என்பதால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

*அனைத்து துறை அதிகாரிகள், அமைச்சர்கள் ஒப்புதலுடன் இந்த முயற்சி எடுக்கப்பட உள்ளது.

*இதனிடையே ஆழ்துளை கிணறு அருகே 45 அடி வரை தோண்டப்பட்ட பள்ளத்தில் தீயணைப்பு படை வீரர் இறங்கினார். ஏணி மூலம் இறங்கிய வீரர் பாறையின் தன்மை குறித்து ஆய்வு செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

*கடினமான பாறைகளை ரிக் இயந்திரத்துக்கு பதில் போர்வெல் மூலம் துளையிடும் பணி தொடங்கியது. ரிக் இயந்திரம் பழுதானதால் போர்வெல் இயந்திரம் மூலம் துளையிடும் முயற்சியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

*1,200 குதிரை திறன் கொண்ட போர்வெல் இயந்திரம் ஒரு மணி நேரத்தில் 100 அடி குழி தோண்டும் என்று கூறப்படுகிறது.


Tags : Borewell , Borewell, Rick, Drilling, Deepwater, Sujith
× RELATED தாம்பரத்தில் ரூ.80.70 லட்சம் மதிப்பில்...