×

பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த 2-வது ரிக் இயந்திரதில் பழுது: 45 அடி தோண்டிய நிலையில் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

திருச்சி: நடுக்காட்டுப்பட்டியில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த 2வது ரிக் இயந்திரதில் பழுது ஏற்பட்டுள்ளது. தற்போது பள்ளம் தோண்டும் பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ரிக் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதை சீர் செய்யும் பணியில் தொழிநுட்ப ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இயந்திரத்தின் துளைபோடும் பிரமாண்ட குழாயில் பழுது ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். குழந்தையை மீட்க பல்வேறு மீட்புக்குழுவினர் தொடர்ந்து முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை.

ரிக் இயந்திரத்தின் மூலம் குழி தோண்டும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஒரு ஆள் இறங்கும் அளவுக்கு ஒரு மீட்டர் அகலத்தில் இந்த குழி தோண்டப்பட்டு வருகிறது. ஆனால், கடினமாக பாறைப்பகுதியாக இருப்பதால், குழி தோண்டுவது சவாலாக உள்ளது. நான்காவது நாளாக இன்று மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது. ஆழ்துளை கிணற்றில் குழந்தை தற்போது 88 அடியில் இருக்கிறது. குழந்தை தொடர்ந்து கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த ஆழ்துளை கிணற்றின் அருகே ரிக் இயந்திரம் மூலம் 40 அடி வரை குழி தோண்டப்பட்டுள்ளது. 98 அடி வரை குழி தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியை முடிக்க கிட்டத்தட்ட 12 மணி நேரம்வரை ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.

எனவே, குழந்தை சிக்கியிருக்கும் இடத்தை நெருங்க இன்னும் நீண்ட நேரம் ஆகலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த 2வது ரிக் இயந்திரதில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பள்ளம் தோண்டும் போது கடினமான பாறைகளால் 2-வது ரிக் இயந்திரத்தில் சிறிய பழுது ஏற்பட்டுள்ளது. ரிக் எந்திரத்தில் போல்ட் பழுதடைந்திருப்பதால் துளையிடும் பணி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 45 அடி பள்ளம் தோண்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் இயந்திரம் 35 அடியும், 2 வது ரிக் இயந்திரம் 10 அடியும் பள்ளம் தோண்டியுள்ளது. ரிக் இயந்திரம் பழுதானதால் போர்வெல் இயந்திரம் மூலம் துளையிட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பாறைகளை உடைக்க போர்வெல் எளிதாக இருக்கும் என்பதால் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.


Tags : drilling operation , Groove, rig machine, repair, suspension
× RELATED தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி...