×

மக்கள் போராட்டத்திற்கு பணிந்த சிலி நாட்டு அதிபர் : அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்று அறிவித்தார்

சாண்டியோ : சிலி நாட்டில் அரசியல் அமைப்பில் சீர்திருத்தம் செய்யக் கோரி நடைபெற்ற பிரமாண்ட பேரணி வன்முறையில் முடிந்தது. தலைநகர் சாண்டியோகோவில் திறண்ட 10 லட்ச்த்திற்கும் மேற்பட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக சென்றனர். இதில் நாட்டின் மக்கள் தொகையில் 5% விட அதிகமாகும். பேரணியின் போது காவல்துறையினர் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டதால் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் தீயிட்டு கொளுத்தினர்.

முதலில் மெட்ரோ ரயில் கட்டண உயர்வை எதிர்த்து நடைபெற்ற போராட்டம் பின்னர் அமைச்சர்கள் சிலரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தீவிரப்படுத்தப்பட்டது. போராட்டங்களால் சிலியில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அமைச்சரவையை மாற்றி அமைக்க உள்ளதாக சிலி அதிபர் செபாஸ்டியன் பினோரா தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்,மக்கள் கோரிக்கையை ஏற்று எனது அமைச்சரவையை மாற்றி அமைக்க திட்டமிட்டு உள்ளேன். இது குறித்து அனைத்து அமைச்சர்களுக்கும் அறிவிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. விரைவில் மாற்றம் வரும் என்றார். அமைச்சரவையை மாற்றி அமைக்கும் சிலி அதிபரின் அறிவிப்பால் போராட்டங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நேர்மையான நெறிமுறை சார்ந்த அரசு வேண்டும் என்று வலியுறுத்தி, போராட்டத்தை தொடர உள்ளதாக இளைஞர்கள் தெரிவித்து உள்ளனர்.


Tags : President ,Chilean ,cabinet reshuffle , Chile, Struggles, Sebastian Pinora, Cabinet, Demand, Youth
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...