×

ஐ.எஸ்.பயங்கரவாத இயக்கத் தலைவர் அல்-பக்தாதி உண்மையில் கொல்லப்பட்டாரா ? : சந்தேகிக்கும் ரஷ்யா; ஆதாரங்களை வெளியிட அமெரிக்காவுக்கு வலியுறுத்தல்

மாஸ்கோ : ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத் தலைவர் அபுபக்கர் அல்-பக்தாதி, கொல்லப்பட்டதை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தி இருந்தாலும் ரஷ்யா பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. வாஷிங்டனில் நேற்று பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சிரியாவில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலின் போது, அபுபக்கர் அல்-பக்தாதி தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். சிரியாவின் வட மேற்கே இட்லிப் நகரில் அபுபக்கர் அல்-பக்தாதி பதுங்கி இருந்தபோது, 8 ஹெலிகாப்டர்களில் விரட்டிச் சென்று தாக்கியதாக டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டார். அப்போது இடுப்பில் கட்டி இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து அபுபக்கர் அல்-பக்தாதி தற்கொலை செய்து கொண்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

இந்நிலையில் அபுபக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்டதாக அமெரிக்கா கூறுவதில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க ராணுவ நடவடிக்கைகள் குறித்து ரஷ்யாவுக்கு நம்பகமான தகவல்கள் கிடைக்கவில்லை என்று ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

அபுபக்கர் அல்-பக்தாதி பதுங்கி இருந்ததாக அமெரிக்கா கூறும் இடம் அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் இருப்பதை ரஷ்யா சுட்டிக் காட்டியுள்ளது. அபுபக்கர் அல்-பக்தாதி உயிரிழந்ததற்கான குறைந்தபட்ச நேரடி ஆதாரங்களையாவுது அமேரிக்கா வெளியிட வேண்டும் என்றும் ரஷ்யா வலியுறுத்தி உள்ளது. ஐஎஸ் தலைவர் அல்-பக்தாதி கொல்லப்பட்டதாக ஏற்கனவே பல முறை அமெரிக்கா கூறியது பொய் என்று நிரூபணம் ஆகியிருப்பதாகவும் ரஷ்யா பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.


Tags : al-Baghdadi ,United States ,Russia ,terrorist leader ,ISIS , ISIS. , Abu Bakr al-Baghdadi, US President, Donald Trump, Russia, United States
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்