×

கடினமாக உள்ள பாறையை உடைக்க சென்னையில் இருந்து திருச்சி வருகிறது ஆகாஷ் என்ற புதிய டிரில் பிட்

திருச்சி: கடினமாக உள்ள பாறையை உடைக்க சென்னையில் இருந்து ஆகாஷ் என்ற புதிய டிரில் பிட் திருச்சி வருகிறது. புதிய வகை டிரில் பிட் ஒரு மணி நேரத்தில் நடுகாட்டுப்பட்டிக்கு வரும் என தகவல் தெரியவந்துள்ளது. ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி 63 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது. திருச்சி மணப்பாறை அருகே 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் சுமார் 63 மணி நேரமாக நடைபெற்று வருகிறது. ரிக் இயந்திரத்தின் மூலம் 100 அடி வரை குழி தோண்டும் முயற்சிகள் தொடர்கின்றன.  ஒரு ஆள் இறங்குமளவுக்கு ஒரு மீட்டர் அகலத்தில் இந்த குழி தோண்டப்பட்டு வருகிறது. 30 அடி மட்டுமே தோண்டப்பட்ட நிலையில் முதல் இயந்திரம் பழுதடைந்தது, இதனையடுத்து 2வது இயந்திரம் கொண்டுவரப்பட்டு, சுஜித் விழுந்த ஆழ்துளை அருகே 3மீ தூரத்தில் 2வது குழி தோண்டப்பட்டு வருகிறது.

காலை சுமார் 4:30 மணியளவில் இயந்திரத்தில் பல் சக்கரத்தில் பழுது ஏற்பட்டது. வெல்டிங் மூலம் பழுது சரி செய்யப்பட்டு, மீண்டும் துளையிடும் பணி துவங்கியது. குழந்தையை மீட்க தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இரவு பகலாக பணி நடந்தாலும் கடினமாக பாறைகள் உள்ளதால் குழி தோண்டுவது தாமதமாகிறது. இந்நிலையில் கடினமான பாறைகளை துளைப்பதற்காக சென்னையில் இருந்து ஆகாஷ் என்ற புதிய டிரில் பிட் கொண்டுவரபடுகிறது. இந்த புதிய டிரில் பிட் இன்னும் 1 மணி நேரத்தில் திருச்சியை வந்தைடையும் என தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது. இதுவரை தாமதமாகி வந்த துளையிடும் பணி தற்போது வேகம் எடுத்துள்ளது. கடினமான பாறைகள் இருந்த நிலையில் தற்போது பாறையின் தன்மை இலகுவாக இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. 40 அடிக்கு கீழே பாறைகள் இருப்பதால் பணிகள் சவாலாக உள்ளது. குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக கவனமுடன் பணியாற்றுகின்றனர். 20 நிமிடங்களுக்கு ஒருமுறை பாறையை தகர்த்து துகள்கள் கொட்டப்படுகின்றன.

ஜி.கே.வாசன் நேரில் ஆய்வு

நடுக்காட்டுப்பட்டியில் மீட்பு பணி நடைபெறும் இடத்தை ஜி.கே.வாசன் பார்வையிட்டு, சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி 63 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது. திருச்சி மணப்பாறை அருகே 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் சுமார் 63 மணி நேரமாக நடைபெற்று வருகிறது.  இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது; மிகுந்த எச்சரிக்கையுடன் திறம்பட பணியாற்றி வருகிறார்கள், மீண்டும் இதுபோன்று ஏற்படாமல் தடுக்க புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பது அவசியம்.
எவ்வளவு சக்தி வாய்ந்த இயந்திரத்தை கொண்டு வந்தாலும் கடினமான பாறைகளால் பாதிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.


Tags : Achyash ,Chennai , Rock, Madras, Trichy, Akash, Drill Pit
× RELATED கடினமாக உள்ள பாறையை உடைக்க சென்னையில்...