×

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க ரிக் இயந்திரம் மூலம் 25 மணி நேரமாக நடைபெறும் குழி தோண்டும் பணி: கவிஞர் வைரமுத்து ஆறுதல் ட்விட்

திருச்சி:ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி 25 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணற்றின் பக்கத்தில் குழி தோண்டும் பணி நேற்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி, 63 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்க பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தற்போது வரை 40 அடி தோண்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை மீட்புப் பணிக்காக கொண்டு வரப்பட்ட 2-வது ரிக் இயந்திரத்தின் பற்கள் பணியின் இடையில் உடைந்தன. இயந்திரத்தின் பற்கள் உடைந்ததால் பாறைகளை உடைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பின்னர் பற்கள் சரிசெய்யப்பட்டு தொடர்ந்து பணி நடைபெற்று வருகிறது.

கவிஞர் வைரமுத்து ட்விட்


அரசு எந்திரத்தையோ, ஆழ்துளை எந்திரத்தையோ குறை சொல்லும் நேரமில்லை,  குழந்தை மீட்பே குறிக்கோள் என கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். பாறை என்பது நல்வாய்ப்பு; மண்சரியாது. தடைக்கல்லைப் படிக்கல்லாக்கி முன்னேறுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பணி நடக்கும் இடத்தில் நடிகர் தாமு பிரார்த்தனை


திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் குழந்தை சுஜித்தை மீட்கும் பணி நடக்கும் இடத்தில் நடிகர் தாமு பிரார்த்தனை செய்து வருகிறார். நடிகர் விமல் கடந்த 2 நாட்களாக மீட்புப் பணி நடக்கும் இடத்தில் இருந்து, சுஜித்தின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி வருகிறார்.

Tags : Viramuthu ,well ,Poet Viramuthu Comfort A , Deep well, child, rig machine, poet diamonds
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...