×

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து 47 மணி நேரமாக தொடர்கிறது: புதிய ரிக் இயந்திரம் வருகை

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க புதிய ரிக் இயந்திரம் நடுகாட்டுப்பட்டிக்கு வந்தது. 3 மடங்கு வேகத்தில் பாறையை துளையிடும் புதிய ரிக் இயந்திரம் நடுகாட்டுப்பட்டிக்கு வந்தது. ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் இருந்து நடுகாட்டுப்பட்டிக்கு வந்து சேர்ந்தது.  திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். அவனை மீட்கும் பணிகள் சுமார் 50 மணி நேரமாக நடைபெற்று வருகிறது. இன்று காலையில் இருந்து ரிக் இயந்திரத்தின் மூலம் பக்கவாட்டில் குழி தோண்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

ரிக் இயந்திரத்தின் மூலம் 100 அடி வரை குழி தோண்டும் முயற்சிகள் தொடர்கின்றன.  ஒரு ஆள் இறங்குமளவுக்கு ஒரு மீட்டர் அகலத்தில் இந்த குழி தோண்டப்பட்டு வருகிறது. இன்று காலை 10 மணி நிலவரப்படி சுமார் 30 அடி வரை குழி தோண்டப்பட்டது. சுமார் 35 அடி தோண்டிய பின்னர் இடையில் பாறை குறுக்கீட்டதால் இந்த முயற்சியில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. பாறையை குடையும் சக்தி வாய்ந்த இயந்திரத்தின் மூலம் தோண்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்காக கரூரில் இருந்து 98 அடி ஆழம் வரை துளையிடும் சக்தி வாய்ந்த வாகனம் 3 மணியளவில் வந்து சேர்ந்தது. ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி 47 மணி நேரத்தை கடந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மீட்பு பணி நடைபெறும் இடத்திற்கு புதிய ரிக் இயந்திரம் வந்தடைந்தது. தற்போது உள்ள இயந்திரத்தை விட 3 மடங்கு வேகத்தில் இந்த இயந்திரம் பள்ளம் தோண்டும்.


Tags : well ,arrival , Deep well, baby, new rig machine
× RELATED புகழூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு இல்லை