×

குழந்தையை மீட்க ராமநாதபுரத்திலிருந்து வருகிறது மற்றொரு ரிக் இயந்திரம்

திருச்சி : பாறைகளை குடைந்து குழி தோண்டும் மற்றொரு ரிக் இயந்திரத்தை ராமநாதபுரத்தில் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி 40 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்படுகிறது. மேலும் ரிக் இயந்திரம் மூலம் குழந்தை சுஜித்தை மீட்க தற்போது 20 அடி ஆழம் வரை குழி தோண்டப்பட்டுள்ளது. இன்னும் 75 ஆதி தோண்டினால் குழந்தை சுஜித்தை ஏடிவிடலாம் என்று மீட்புப்படையினர் நம்பைக்கை தெரிவித்துள்ளார். ஆனால் குழி தோண்டும் இடத்தில் பாறைகள் உள்ளதால் பனி தொய்வு பெற்றுள்ளது.

இதனால் பாறைகளை குடைந்து குழி தோண்டும் மற்றொரு ரிக் இயந்திரத்தை ராமநாதபுரத்தில் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக திறன் கொண்ட புதிய ரிக் இயந்திரம் நடுநாயக்கப்பட்டியை அடைய இரவு 7 மணி ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பாறைகளைக் குடைந்து குழி தோண்டுவது சவாலாக இருப்பதால் அதிக திறன் கொண்ட மற்றொரு ரிக் இயந்திரம் கொண்டுவரப்படுகிறது.


Tags : Ramanathapuram ,baby , Another rig machine ,Ramanathapuram , rescue the baby
× RELATED ராமநாதபுரம் தொகுதி வேட்பாளரை...