×

அதிமுக மூத்த அமைச்சரின் தந்தை கட்டியது திறப்பு விழாவுக்கு முன்பே புதிய பாலத்தில் விரிசல்

அறந்தாங்கி : அறந்தாங்கியில் அதிமுக மூத்த அமைச்சரின் தந்தை கான்ட்ராக்டில்  கட்டிய வெள்ளாற்று பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே சேதமடைந்தது. இதுபற்றி  செய்தி சேகரித்ததை அறிந்த கான்ட்ராக்டர் நேற்று முன்தினம் இரவோடு இரவாக பாலத்தை  சீரமைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை  அடுத்த புதுவாக்கோட்டை, கம்மங்காடு, பத்தரசர்கோட்டை, தர்மராஜன்வயல்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அறந்தாங்கி வந்து செல்வதற்கு  இடையார் சென்று சுற்றி வர வேண்டிய நிலை இருந்தது. இதனால் மக்கள் அறந்தாங்கியில்  இருந்து புதுவாக்கோட்டைக்கு சுமார் 4 கி.மீ தூரம் சுற்றி வந்தனர். இதையடுத்து, வெள்ளாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைத்தால், பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என தமிழக அரசு கருதியது. இதன்பின், ரூ.1 கோடியே 8 லட்சத்து 42 ஆயிரம்  மதிப்பீட்டில் உயர்மட்டம் பாலம் அமைக்க டெண்டர் விட்டது. 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உயர்மட்ட பாலம் கட்டும்பணிகள் தொடங்கினர். பாலம் கட்டும்பணி 2016 ஆண்டு நிறைவு பெற்றது.

கட்டுமான  பணியின்போதே பாலத்தில் ஒரு சில இடங்களில் விரிசல் விழுந்தது. இதனை  அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. பாலத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்த  நெடுஞ்சாலைத்துறையினர் பாலத்தில் முறைப்படி கனரக வாகன போக்குவரத்தை இன்று  வரை தொடக்கி வைக்கவில்லை. பாலம் திறப்பு விழா காணாமலே உள்ளது. இருப்பினும்  இந்த பாலத்தில் லோடு ஆட்டோ, கார்கள், இருசக்கர வாகனங்கள், டிராக்டர்கள்,  மாட்டுவண்டிகள் மட்டும் சென்று  வருகின்றன. இந்தநிலையில், பாலத்தின் பல  இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. பாலத்தில் இருபகுதிகளை  இணைக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ள இரும்புகள் சட்டங்களின் வெல்டிங் பற்ற  வைப்புகள் உடைந்தும், முறையாக கான்கிரீட் போடாததால், இரும்பு சட்டங்கள்  வெளியே தெரிகின்றன. ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலத்தில் கனரக  வாகனங்கள்கூட செல்லாத நிலையில் பாலம் பல இடங்களில் சேதமடைந்துள்ளது  பொதுமக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இந்த பாலம் அதிமுக மூத்த  அமைச்சரின் தந்தையின் கான்ட்ராக்ட்டில் கட்டப்பட்டதாகும். பாலம்  சேதமடைந்தது குறித்து நிருபர் செய்தி சேகரித்து படம் பிடித்ததை அறிந்த பொதுப்பணித்துறையினர் நேற்று முன்தினம் இரவோடு இரவாக வந்து பாலத்தில் சேதமடைந்த இடத்தை  சீரமைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தரமற்ற பாலம் அமைத்தவர்கள் மீது  நடவடிக்கை எடுகு–்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : senior minister ,bridge ,AIADMK ,inauguration , father,senior minister , AIADMK,inauguration
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!