×

மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்

பால்கர்: மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் மாவட்டத்தில் நேற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் மாவட்டத்தில், கடந்தாண்டு ஓராண்டாகவே அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களில் 4வது முறையாக, நேற்று காலையும் இங்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. தனு தாலுகாவில் உள்ள துந்தல்வாடி என்ற இடத்தில், பூமிக்கடியில் 5 கிமீ ஆழத்தில் இதன் மையம் இருந்தது. இதன் காரணமாக, இந்த மாவட்டத்தில் வீடுகள், கட்டிடங்கள் இலேசாக அதிர்ந்தன. மக்கள் பீதி அடைந்தனர். இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.



Tags : Earthquake ,Maharashtra Earthquake ,Maharashtra , Earthquake , Maharashtra
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்