×

அச்சுதானந்தனுக்கு உடல்நல குறைவு

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் திடீர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரள முன்னாள் முதல்வரும், தற்போதைய நிர்வாக சீர்திருத்த ஆணைய தலைவருமான  வி.எஸ்.அச்சுதானந்தன் சமீபத்தில் தனது 96வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இந்த  நிலையில் நேற்று முன்தினம் இவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து  திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது மூளையில் லேசான ரத்த  கசிவு ஏற்பட்டதாகவும், சிகிச்சைக்கு பின் தற்போது உடல்நிலை சீராகி  வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். அவரை கேரள முதல்வர் பினராய் விஜயன்  மருத்துவமனையில் சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தார்.

Tags : Achuthanandan , Achuthanandan,lack , health
× RELATED கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கு 100வது பிறந்தநாள்