×

டெல்லியில் 2 வீடுகள் பங்களாவை காலி செய்ய தேவகவுடாவுக்கு உத்தரவு

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு டெல்லியில் வழங்கப்பட்ட அரசு பங்களாவை காலி செய்யும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், எம்பி.க்களுக்கு டெல்லியில் அரசு பங்களா, விருந்தினர் மாளிகை ஒதுக்கப்படுவது வழக்கம். ஆனால், இவர்கள் தங்கள் பதவிக் காலம் முடிந்த பின்னர் அல்லது அமைச்சரவை கலைக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், இந்த விதிகள் பொதுவாக கடைபிடிக்கப்படுவதில்லை.
 
பிரதமர் மோடி தலைமையில் பாஜ 2வது முறையாக ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, கடந்த மே 25ம் தேதி அமைச்சரவையை கலைத்து ஜனாதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, பழைய எம்பி.கள் தங்கள் அரசு பங்களாவை காலி செய்யாததால், அவர்களுக்கு கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இந்நிலையில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு சப்தர்ஜங் பகுதியில் அரசு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரம், ராபி மார்க்கில் உள்ள வி.பி. விருந்தினர் மாளிகையையும் அவர் பயன்படுத்தி வருகிறார். இதை காலி செய்யும்படி மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது.Tags : Devakauda ,houses bungalow ,Delhi , Devakauda,vacate, bungalow, Delhi
× RELATED சிவசேனாவின் பால்தாக்கரே கூட்டணி...