×

பரூக் அப்துல்லாவுக்கு மோடி பிறந்த நாள் வாழ்த்து

ஸ்ரீநகர்:  காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவுக்கு கடந்த 21ம் தேதி 82வது பிறந்த தினம். தற்போது, ஸ்ரீநகர் தொகுதி எம்பி.யாகவும் உள்ள அவர், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டார்.

இந்நிலையில், பரூக் அப்துல்லாவுக்கு பிரதமர் மோடி நேற்று தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அதில், பரூக் அப்துல்லா நீண்ட நாட்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்,’ என மோடி கூறியுள்ளார்.Tags : Modi Birthday ,Farooq Abdullah Modi Birthday ,Farooq Abdullah , Modi, Birthday, Farooq Abdullah
× RELATED உமர் அப்துல்லாவை சந்தித்தார் ஃபரூக் அப்துல்லா