×

வங்கதேச அணியின் இந்திய சுற்றுப்பயணம் விலகினார் தமிம் இக்பால்

தாக்கா: இந்திய அணியுடன் நடைபெற உள்ள டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து வங்கதேச அணி தொடக்க வீரர் தமிம் இக்பால் விலகியுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்ககதேச அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி டெல்லியில் நவம்பர் 3ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், வங்கதேச அணி தொடக்க வீரர் தமிம் இக்பால் இந்திய சுற்றுப்பயணத்தில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.

ஏற்கனவே விலா பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் அவர், மனைவிக்கு 2வது பிரசவம் என்பதால் உடனிருப்பதற்காக இந்திய டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் இருந்து விலகியுள்ளார். டி20 அணியில் அவருக்கு பதிலாக இம்ருல் கேயஸ் சேர்க்கப்படுவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. வங்கதேச டி20 அணி: ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), லிட்டன் தாஸ், இம்ருல் கேயஸ், சவும்யா சர்க்கார், முகமது நயிம், முஷ்பிகுர் ரகிம், மகமதுல்லா, ஆபிப் உசேன், அமினுல் இஸ்லாம், அராபத் சன்னி, அல் அமின் உசேன், முஸ்டாபிசுர் ரகுமான், ஷபியுல் இஸ்லாம்.


Tags : Bangladesh ,India ,Tamim Iqbal ,tour , Tamim Iqbal, India ,Bangladesh
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...