×

எலைட் டிராபி டென்னிஸ் பைனலில் சபலென்கா

ஸுஹாய்: சீனாவில் நடைபெறும் எலைட் டிராபி டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா தகுதி பெற்றார். அரை இறுதியில் செக் குடியரசின் கரோலினா முச்சோவாவுடன் நேற்று மோதிய சபலென்கா 7-5, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் போராடி வென்று பைனலுக்கு முன்னேறினார்.

மற்றொரு அரை இறுதியில் நெதர்லாந்தின் கிகி பெர்டன்ஸ் 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனை சாய்சாய் ஸெங்கை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். எலைட் சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான பைனலில் சபலென்கா - கிகி பெர்டன்ஸ் இன்று மோதுகின்றனர்.Tags : Elite Trophy Tennis Final , Sabalenka,Elite Trophy ,Tennis ,Final
× RELATED வுஹான் ஓபன் டென்னிஸ் சபலென்கா சாம்பியன்