×

தென் மண்டல ஃபிஸ்ட்பால் தமிழ்நாடு அணிகள் சாம்பியன்

சென்னை: தென் மண்டல அளவிலான முதலாவது தேசிய ஃபிஸ்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி ஏற்காட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்தது. இதில் தென் மண்டலத்தில் உள்ள தமிழ்நாடு,  புதுச்சேரி, அந்தமான் நிகோபர், கேரளா, லட்சத்தீவு, கர்நாடகா,  ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. ஆண்கள் பிரிவு இறுதி போட்டியில் தமிழ்நாடு 11-8, 11-00 என்ற நேர் செட்களில் புதுச்சேரியை வென்று சாம்பியன் பட்டம் பெற்றது. இந்தப் பிரிவில் தெலுங்கானா 3வது இடத்தையும், கேரளா 4வது இடத்தையும் பிடித்தன.

பெண்கள் பிரிவுக்கான இறுதி போட்டியில் தமிழ்நாடு 8-11, 11-8, 11-8 என்ற செட்களில் புதுச்சேரியை போராடி வென்றது. இந்தப் பிரிவில்  கேரளா 3வது இடத்தையும், தெலுங்கானா 4வது இடத்தையும் பெற்றன.சிறந்த வீராங்கனைக்கான விருது தமிழகத்தின் பியூலா ஜாய்ஸ்,  சிறந்த வீரருக்கான விருது கேரளாவின் சனால் ஆகியோர் பெற்றனர்.

Tags : Tamil Nadu Teams South Region Fistball ,Tamil Nadu , South Region ,Fistball, Tamil Nadu ,champion
× RELATED கல்லூரி கிரிக்கெட் லயோலா, டபுள்யு.சி.சி அணிகள் சாம்பியன்