×

புத்தம் புதிய வடிவில் 2020 டாடா நெக்ஸான்

நெக்ஸான் மாடலில் இருந்து, நியூ 2020 நெக்ஸான் மாடலை டாடா நிறுவனம் களம் இறக்கியுள்ளது. முன்புற டிசைன், புதிய பம்பர் டிசைன், பனி விளக்கு மற்றும் அப்டேட் செய்யப்பட்ட மேல்புற தளம் மற்றும் பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய ஹெட்லைட்ஸ் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளது. இப்புதிய மாடலில் வித்தியாசமான கிரில் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளதால், நியூ 2020 நெக்ஸான் கார் பார்ப்பதற்கு அசத்தலாக உள்ளது. பிஎஸ்6 தரம் கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது, தற்போதைய மாடலைவிட அதிகளவிலான ஆற்றலை வெளிப்படுத்தும். மற்றொரு நான்கு சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் 108 பிஎச்பி பவரையும் 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இரு இன்ஜின்களும் ஆறு வேக நிலைகளை வழங்கக்கூடிய மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது ஏஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் விற்பனையாகிறது.

ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான டிரைவிங் மோட்களில் தற்போதுள்ள நெக்ஸான் மாடல் கிடைக்கிறது. நியூ 2020 நெக்ஸான் முழுவதும் டிஜிட்டலாக மாற்றப்பட்ட இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்ட்டர் அமைப்பு இடம்பெற்றுள்ளது. அதேபோல், ஸ்மார்ட் இணைப்புகளுடன்கூடிய அப்டேட் செய்யப்பட்ட தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டமும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இக்காரின் உட்புற அமைப்பு ஒழுங்கமைப்பட்டுள்ளதால் திருப்தியான கேபின் உணர்வை பெறலாம். இப்புதிய 2020 நெக்ஸான் சந்தைக்கு அறிமுகமாகும்போது, ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா போன்ற கார்களுக்கு கடுமையான போட்டியை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

டாடா நிறுவனம் எலக்ட்ரிக் கார் உற்பத்தியிலும் தீவிரம் காட்டி வருகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் எலக்ட்ரிக் கார்களில் டாடா நிறுவனம் ஜிப்ட்ரோன் என்ற இவி தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. டாடா நிறுவனம் நெக்ஸான் எஸ்யூவி ரக காரை அறிமுகப்படுத்தியபோது, அதன் மாடர்ன் டிசைன் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. அதேபோல்தான் இந்த நியூ 2020 நெக்ஸான் எஸ்யூவி ரக காரும் அதைவிட மெருகேற்றப்பட்ட டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, உலகளாவிய என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டிலும் ஐந்து ஸ்டார்களை பெற்றுள்ளது. இது, வாடிக்கையாளர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அடுத்த ஆண்டு வெளிவர உள்ள இப்புதிய 2020 நெக்ஸான், மோட்டார் வாகன சந்தையை ஒரு கலக்கு, கலக்கும் என்பதில் சந்தேகம் இல்ைல. விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.Tags : Nexon ,Tata , Brand New, 2020 ,Tata Nexon
× RELATED 01-11-2020 இன்றைய சிறப்பு படங்கள்