×

அசத்தும் புதிய பஜாஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

பஜாஜ் நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர். பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் மார்க்கெட்டில் உள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் மிக நேர்த்தியான, கவரும் டிசைனிலான ஸ்கூட்டராக பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வந்துள்ளது. இது, நிச்சயம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் பெரும் வரவேற்பை பெற்று, புதிய பாதையை அமைக்கும் என கருதலாம். இந்த ஸ்கூட்டரில், எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், தொடு உணர் வசதியுடன் கட்டுப்பாட்டு பட்டன்கள் மற்றும் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளன.

மொத்தமாக 6 வண்ணத்தேர்வுகளில் வருகிறது. ஐபி-67 தரத்திற்கு இணையான என்சிஏ செல்கள் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை 5-15 ஆம்பியர் எலக்ட்ரிக்கல் பாயிண்ட் மூலமாக சார்ஜ் ஏற்ற முடியும். பேட்டரியில் மின் இழப்பு ஏற்படுவதை தவிர்க்க, நவீன தொழில்நுட்பமும் உள்ளது. இந்த ஸ்கூட்டரில் ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என இரண்டு விதமான டிரைவிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஈக்கோ மோடில் வைத்து இயக்கும்போது, 95 கிமீ தூரமும், ஸ்போர்ட் மோடில் வைத்து இயக்கினால் 85 கிமீ தூரமும் பயணிக்க முடியும். இதன் விலை விபரம் அறிவிக்கப்படவில்லை.

Tags : new Bajaj ,Electric ,scooter
× RELATED ஒன்றிய அரசின் வரியில்லா வர்த்தக...