×

தீபாவளியை ஒட்டி கோ-ஆப்டெக்ஸில் கடந்தாண்டு 115 கோடி விற்பனை இந்தாண்டு 65 கோடியை எட்டவே திண்டாட்டம்: நிர்வாக அலட்சியம்தான் காரணம் என ஊழியர்கள் குற்றச்சாட்டு

சென்னை: தீபாவளி பண்டிகையை ஓட்டி கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் கடந்தாண்டு 115 கோடி என்ற நிலையில் இந்தாண்டு 65 கோடி எட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் 168 கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் உள்ளது. இதன் மூலம் பருத்தி, பட்டு சேலைகள், வேட்டி, சட்டை, போர்வை, தலையணை உறைகள் உள்ளிட்ட பல்வேறு ரகங்களில் ஜவுளி பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை நிலையங்கள் தனியாருக்கு இணையாக போட்டி போடும் வகையில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. ஆனாலும், போதிய அளவில் கோ ஆப்டெக்ஸ் நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்லை. இதனால், கோ ஆப்டெக்ஸ் நிர்வாகம் சார்பில் விற்பனை இலக்கை எட்ட முடியாமல் தவித்து வருகிறது.

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ஓட்டி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படுவது வழக்கம். இதற்காக, கோஆப்டெக்ஸ் நிர்வாகம் மூலம் விற்பனையை அதிகரிக்கும் வகையில் தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இது தொடர்பாக கோ ஆப்டெக்ஸ் நிர்வாகம் சார்பில் போதிய அளவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் இந்தாண்டு விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக, மற்ற தனியார் ஜவுளி கடைகளில் கூட்டம் நிரம்பி வரும் நிலையில் பல இடங்களில் உள்ள கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதனால், இந்த தீபாவளி பண்டிகை விற்பனை பெரிய அளவில் சரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்தாண்டு 115 கோடி வரை தீபாவளி பண்டிகையை ஓட்டி விற்பனை நிலையங்கள் மூலம் வருவாய் எட்டப்பட்டது. ஆனால், தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்தாண்டு 65 கோடி வருவாயை எட்ட முடியாமல் கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் தவித்து வருகிறது. இதற்கு, கோ ஆப்டெக்ஸ் நிர்வாகத்தின் அலட்சியம் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும், கோ ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் வெங்கடேஸ்வரன் ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள விற்பனை நிலையங்களை ஆய்வு செய்வதாக கூறி, சுற்றுலா செல்வதை விடுத்து, தமிழகத்தில் உள்ள கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் விற்பனையை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வரும் காலங்களில் விற்பனை குறைந்து விட்டதாக கூறி மூட வாய்ப்புள்ளது என்று கோ ஆப்டெக்ஸ் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.Tags : Co-optex ,Diwali , co-optex ,Diwali, Staff allegations , administrative ,negligence:
× RELATED கொரோனா ஊரடங்கால் இளநீர் விற்பனை பாதிப்பு