×

இன்று தீபாவளி பண்டிகை கவர்னர், முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கவர்னர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.கவர்னர் பன்வாரிலால் புரோகித்: தீபாவளி திருநாள் மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் வளமையையும் கொண்டுவந்து ஒவ்வொருவரின் வாழ்விலும் நிலைபெற்றிருக்க வாழ்த்துகிறேன்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி: தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும், எனது இதயம் கனிந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள். தீமைகள் அகன்று நன்மைகள் பெருகட்டும். இருள் நீங்கி, ஒளி நிறைந்திடும் நன்னாளாகட்டும்.துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும். அனைவருக்கும் இனிய  தீபாவளி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு உரிதாக்கி கொள்கிறேன். கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்):  ஒளியானது எவ்வாறு இருளை அகற்றுகிறதோ, அதே போன்று மக்களின் மனங்களிலும், வாழ்விலும் ஒளிவீசி மகிழ்வோடு வாழ தமிழக மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்): ஒளிமயமான இலக்கை நோக்கி உழை க்க நாம் அனைவரும் ஒளிகளின் விழாவான இந்த நன்னாளில் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்.விஜயகாந்த் (தேமுதிக நிறுவனர்): அனைத்து மக்களும் இன்பத்தையும், நிம்மதியையும் பெற்று தீபாவளி திருநாளை சிறப்பாக கொண்டாடவேண்டுமென தேமுதிக சார்பில் எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.பொன்.ராதாகிருஷ்ணன் (முன்னாள் மத்திய அமைச்சர்): குடும்பத்தோடு குதுகலமாக எல்லா நலன்களும், வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ இறைவன் ஆசிர்வதிக்க பிரார்த்திக்கின்றேன். ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): தீபாவளி திருநாள் நாட்டு மக்களுடைய அனைவருடைய வளர்ச்சிக்கும் வழி வகுக்க வேண்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.சரத்குமார் (சமக தலைவர்): பிரிவினைகளும்,  பேதங்களுமற்ற சமுதாயம் மலரச் செய்வதாக அமையட்டும் என்ற நல்லெண்ணத்தை  தீபாவளித் திருநாளில் பகிர்ந்து, அனைவருக்கும் தீபாவளித் திருநாள்  நல்வாழ்த்துகள்.டி.டி.வி.தினகரன்  (அமமுக பொது செயலாளர்): அகத்திலும், புறத்திலும் இருள் அகன்று அனைவரும் ஆனந்தமாக வாழ்ந்திட தீபாவளி  நாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்.

அன்புமணி ராமதாஸ்(பாமக இளைஞர் அணி தலை வர்): மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும் என்று கூறி அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.இதேபோல, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழகம் தலைவர் ஏ.நாராயணன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன், மக்கள் விடுதலைக் கட்சித் தலைவர் முருகவேல்ராஜன் உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ(மஜக பொதுச் செயலாளர்): தீபாவளி நாளில் கல்வி வளர்ச்சி, அமைதி, சமூக ஒற்றுமை, நாட்டின் வளர்ச்சி, சுற்றுச்சூழல் நலன், நீராதார பாதுகாப்பு என நாடு சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் எல்லோரும் இணைந்து பணியாற்ற  உறுதியேற்போம். அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கிட தீபாவளி வாழ்த்துக்கள்.

Tags : Governor ,Greetings ,Chief Minister ,party ,leaders ,Diwali , Diwali, governor, chief minister, political party
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...