தீபாவளியை முன்னிட்டு ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு : திருச்சி ரயில்வே எஸ்.பி. பேட்டி

சென்னை:  திருச்சி ரயில்வே எஸ்.பி சரோஜ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: தீபாவளியை முன்னிட்டு ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ரயில்வே போலீசார் மற்றும் ஆர்பிஎப் போலீசார் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அனைத்து ரயில் நிலையங்களிலும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்நிலையங்களில் சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து வருகிறோம். மேலும், ரயில்களில் பயணம் செய்யும் போது ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் 1512 என்ற எண்ணிற்கும், 94454 64765, 99625 00500 என்ற செல்போன் எண்ணிற்கும் வாட்ஸ் மூலம் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>