×

வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகும் சென்னையில் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணி 72 % மட்டுமே நிறைவு : விரைந்து முடிக்க உத்தரவு

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகும் சென்னையில் உள்ள மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணி 72 சதவீதம் மட்டும் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்று ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார். வடகிழக்கு பருவமழையொட்டி சென்னை உள்ள மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணியில் சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் அனைத்து வடிகால்களையும் பொறியாளர்கள் ஆய்வு செய்து எந்தெந்த வடிகால்களில் தூர்வார வேண்டும் என்பது தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் கல்வாய்கள் தூர்வாரும் பணிக்கான நிர்வாக அனுமதியை வட்டார துணை ஆணையர்களே வழங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் மழைநீர் வடிகாலில் நீர் சேரும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் முறையாக ஆய்வு செய்து தூர்வார வேண்டும் என்றும் இந்தப் பணிகளை ஜி.ஐ.எஸ் முறையில் புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மேலும் தூர்வாரும் கழிவுகளை குப்பை கிடங்கில் அதற்கென தனியாக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில்தான் கொட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி சென்னை மாநகராட்சியில் 2071 கிலோ மீட்டர் நீளத்திற்கு உள்ள 8835 மழைநீர் வடிகால்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் 1650 கிலோ மீட்டர் நீளமுள்ள 7376 மழைநீர் வடிகால்களை தூர்வார முடிவு செய்யப்பட்டது. இந்த இடங்களில் தூர்வாரும் பணி முழுமையாக மேற்கொண்டால் 4 லட்சத்து 51 ஆயிரத்து 436 மெட்ரிக் டன் வண்டல்கள் கிடைக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 24ம் தேதி நிலவரப்படி 75 சதவீத பணிகள் மற்றும் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி 1186 கிலோ மீட்டர் நீளமுள்ள 5634 மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணி முழுமையாக முடிவடைந்துள்ளது. 206 கிலோ மீட்டர் நீளமுள்ள 800 மழைநீர் வடிகால்களில் பணிகள் நடைபெற்றுவருகிறது.
இதன் மூலம் 2 லட்சத்து 89 ஆயிரத்து 36 மெட்ரிக் டன் வண்டல்கள் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 845 மெட்ரிக் டன் வண்டல்கள் குப்பை கிடங்குகளில் கொட்டப்பட்டுள்ளன. இதன்படி பார்த்தால் சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகள் மற்றும் முடிவடைந்துள்ளது.

இன்னும் 257 கிலோ மீட்டர் நீளமுள்ள 933 இடங்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.   இந்நிலையில் பல இடங்களில் ஒப்பந்ததாரர்கள் தூர்வாரும் பணியை தாமதமாகத்தான் தொடங்கியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பணிகளை விரைவு படுத்தி அடுத்த கனமழை பெய்வதற்குள் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

10ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்

சென்னை மாநகராட்சியில் நடைபெற்று வரும் மழைநீர் பணிகள்   தொடர்பாக கடந்த 24ம் தேதி விரிவான ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர்  பிரகாஷ், தற்போது 42 இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை நவம்பர் 10ம்  ேததிக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் ேதங்கும்  மழைநீர் வெளியேற தடையாக உள்ள இடங்களில் மோட்டார் பம்புகளை தயாராக  வைத்திருக்க வேண்டும் என்றும் தண்ணீர் தேங்கினால் அவற்றை உடனடியாக அகற்ற  வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

Tags : Chennai , monsoon in Chennai, 72% of rainwater drains
× RELATED சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில்...