×

ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒழுங்கு முறைகளை ஏற்படுத்த வேண்டும்: தலைவர்கள் வேதனை

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: திருச்சியில் குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்தது தமிழகத்திற்கே துயரமான சம்பவம். சுர்ஜித் எப்போது மீட்கப்படுவான் என்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒழுங்கு முறைகளை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் பாதுகாப்புக்காக தேசிய அளவில் ஒரு அமைப்பு ஒன்று உருவாக்க வேண்டும். குழந்தைகளுக்காக மாநில அரசுகளும் தனிக்குழுவை அமைக்க வேண்டும். எந்தச் சட்டத்தை கொண்டு வந்தாலும் அதன் மூலம் வரும் வரியை குழந்தைகளுக்காக எழுத வேண்டும். குழந்தைகளுக்காக பெற்றோர் செலவிடும் நேரம் குறைந்துவிட்டது என தெரிவித்தார். ஆழ்துளை கிணறு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என திருநாவுக்கரசர் எம்.பி தெரிவித்தார்.

மேலும் ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித் மீண்டு வர பிரார்த்திக்கிறேன் என தெரிவித்தார். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலங்களில் இனி நடக்க கூடாது எனவும் கூறினார். குழந்தை சுர்ஜித்தின் மனநிலை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது என திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவன் நலமுடன் மீட்கப்பட வேண்டும். கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தும் கண்டறியப்பட்டு அவை மூடப்பட வேண்டும். இந்தப் பணியில் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டியது மக்களாகிய நம் கடமை என்றும் அவர் கூறியுள்ளார். ஆழ்துளை கிணறு தொடர்பாக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும். குழந்தை சுஜித்தின் தாயை சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின் கரூர் எம்.பி. ஜோதிமணி பேட்டியளித்துள்ளார். ஆழ்துளை கிணறு தொடர்பாக அரசு விதிமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும் என ஜோதிமணி கூறியுள்ளார். குழந்தை சுஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும், அவரது குடும்பம் துடிப்பதைப் போல் நாமும் துடிக்கிறோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் அரசு முழுமையாக செயல்பட்டு அந்த உயிரை மீட்டாக வேண்டும், தொடர்ச்சியான இதுபோன்ற சோக நிகழ்வுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வேண்டும் என கூறினார்.


Tags : wells ,leaders , Awareness ,safety regulations,established regarding,deep wells,tormenting leaders
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...