×

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் தலையை சுற்றி மண் விழுந்துள்ளதால் மீட்பு பணியில் சிக்கல்

திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் குழந்தை சுஜித் தலையை சுற்றி மண் விழுந்துள்ளதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை விளையாடிக்கொண்டிருந்த போது தவறி விழுந்தது. குழந்தையை மீட்க வட்டாட்சி வருவாய் அதிகாரிகள், போலீஸார், ஆட்சியர், மீட்புக் குழுவினர், ஊர்மக்கள் என அனைவரும் போராடி வருகின்றனர். குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் கையை அசைக்கும் காட்சி வெளியாகி காண்போரை கலங்கச் செய்கிறது.

சிறுவனின் அசைவுகள் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் போராட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தைக்கு சுவாசிக்க தொடர்ச்சியாக ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. 30 அடியில் குழந்தை சிக்கியிருந்த கயிறு கட்டி குழந்தை இழுக்க முயற்சி செய்யும் போது அது தோல்வியில் முடிந்தது.

துரதிர்ஷடவசமாக குழந்தை 30 அடியில் இருந்து கீழே சென்று 70 அடிக்கு சென்று மாட்டிக்கொண்டது. இந்நிலையில் சிறுவனின் அசைவுகள் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது. 70 அடிக்கு சென்ற குழந்தையை சுற்றி மண் விழுந்ததால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் காலை 7 மணிக்கு மேல் சிறுவன் சுஜித்தின் சத்தத்தை உணர முடியவில்லை என்று சுகாதாரத்துறை அமைசசர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


Tags : Save Sujith ,Deepwater Well ,Trichy ,Manapaarai ,baby , Trichy, Manapaarai, Deepwater well, Trend on Twitter, Save Sujith, 2 year old baby, Sujith
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்