×

10 கிமீ ஜாக்கிங் செய்த மம்தா

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மிகவும் சுறுசுறுப்பானவர். அவருக்கு தற்போது 64 வயதாகிறது. வீட்டில் தினமும் டிரெட்மில்லில் நடை பயிற்சி செய்கிறார். திரிணாமுல் காங்கிரஸ் நடத்தும் பேரணிகளில் அவர் பல கிமீ  தூரம் சளைக்காமல் நடப்பார். இந்நிலையில், சர்வதேச பருவநிலை மாற்றம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, மேற்கு வங்கத்தில் நேற்று நடத்த பேரணியில் அவர் 10 கிமீ தூரத்துக்கு மலைப்பகுதியில் நடந்தும், ஜாக்கிங்கும் செய்தார்.  டார்ஜிலிங்கில் உள்ள மலையடிவார பகுதியான குர்சியானில் இருந்து மகாநதி வரை ஜாக்கிங் சென்ற அவர், மீண்டும் அதேவழியில் திரும்பி வந்தார். இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘நல்ல எதிர்காலத்தை உருவாக்க, நல்ல  ஆரோக்கியமே முக்கியம்,’ என்று கூறியுள்ளார்.

Tags : Mamta , Mamta , jogging
× RELATED மேற்குவங்கத்தில்10, 12 பொதுத்தேர்வு...