×

நாடாளுமன்றம் புதுப்பிப்பு பணி ஏலத்தில் வென்றது குஜராத் நிறுவனம்

அகமதாபாத்: நாடாளுமன்ற மைய மண்டபத்தை புதுப்பிக்கவும், மத்திய தலைமைச் செயலகம் கட்டுவதற்கும் கட்டிடக்கலை மற்றும் இன்ஜினியரிங் தொடர்பான ஆலோசனை வழங்குவதற்காக நடத்தப்பட்ட ஏலத்தில் குஜராத்தை  சேர்ந்த ‘எச்சிபி  டிசைன்’ நிறுவனம் வென்றுள்ளது. டெல்லியில் உள்ள நாடாளுமன்ற மைய மண்டபம் பழமையடைந்து விட்டதால், அதை புதுப்பிக்ககவும், மத்திய தலைமை செயலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான  கட்டிடக்கலை மற்றும் இன்ஜினியரிங் டிசைன் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் நிறுவனம் ஏலம் மூலம் தேர்வு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது.

இதில், அகமதாபாத்தைச் சேர்ந்த, ‘எச்சிபி டிசைன் பிளானிங் அண்ட் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம் வென்றுள்ளது. குஜராத்தின் சமர்பதி ஆற்றங்கரையில், பிரதமர் மோடி கலந்து கொண்ட மகாத்மா காந்தி 150வது பிறந்த  தின விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்த நிறுவனம் செய்திருந்தது. இதற்கு முன்பு பல அரசு திட்டங்களை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது. தற்போது, நாடாளுமன்ற மைய மண்டப புதுப்பிப்பு பணிக்கான ஆலோசனை வழங்கும்  ஏலத்திலும் இந்த நிறுவனம் வென்றுள்ளதாக மத்திய பொதுப்பணித் துறை இயக்குனர் ஜெனரல் பிரபாகர் சிங் தெரிவித்துள்ளார்.  


Tags : company ,Gujarat , Parliament, Gujarat Institute
× RELATED உத்தரகாண்டில் இடிந்து விழுந்த சுரங்க...