×

அனைத்து பிளாட் உரிமையாளருக்கும் தலா 25 லட்சம் வழங்க வேண்டும் மரடு அடுக்குமாடி குடியிருப்பை இடிக்கும் உத்தரவில் இருந்து பின்வாங்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி

திருவனந்தபுரம்: கொச்சி மரடு அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்கும் உத்தரவில் இருந்து ஒரு அடி கூட பின்வாங்க முடியாது. குடியிருப்பு உரிமையாளர்கள் அனைவருக்கும் தலா ₹25 லட்சத்தை கேரள அரசு வழங்க வேண்டும் என்று  உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. கேரள மாநிலம், கொச்சி மரடில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டப்பட்ட 4 அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க உச்ச நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது. இந்த 4 அடுக்குமாடி  குடியிருப்புகளிலும் 370 பிளாட்டுகள் உள்ளன. இதன் உரிமையாளர்கள் அனைவருக்கும் முதல் தவணையாக தலா 25 லட்சம் நஷ்ட ஈடாக கேரள அரசு வழங்க வேண்டும். பின்னர் அந்த தொகையை கட்டட நிறுவனத்திடம் இருந்து வசூலிக்க  வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இதை தொடர்ந்து கடந்த மாதம் பிளாட்டுகளில் வசித்த அனைவரும் காலி செய்தனர். இதற்கிடையே பிளாட்டுகளை இடிக்க டெண்டர் கோரப்பட்டது. இதில் விண்ணப்பித்தவர்களில் சென்னை நிறுவனம் உட்பட 3 நிறுவனங்கள் தேர்வு  செய்யப்பட்டன. இதற்கிடையே நஷ்ட ஈடு தொகையை வழங்க முன்னாள் நீதிபதி பாலகிருஷ்ணன் நாயர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு முன் பிளாட் உரிமையாளர்கள் விண்ணப்பித்து நஷ்ட ஈடு தொகையை  பெற்றுக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து பிளாட் உரிமையாளர்கள் விண்ணப்பங்களை அளித்தனர். இதுவரை 239 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்ளை பரிசீலித்த குழு 17 பேருக்கு மட்டுமே  உச்சநீதிமன்றம் அறிவித்த 25 லட்சம் வழங்க முடியும் என்று கூறியது. மற்ற அனைவரும் பிளாட் வாங்கிய தொகையின் மதிப்பை குறைத்து பதிவு செய்துள்ளதால் 25 லட்சம் வழங்க முடியாது என்று குழு கூறியது.

 இதை எதிர்த்து பிளாட் உரிமையாளர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தனர். இந்த மனு மீது ேநற்று நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கட்டுமான நிறுவன  உரிமையாளர்களும் நீதிமன்றத்தில் தாங்களாகவே வாதிட வந்தனர். அவர்கள் கூறுகையில், அடுக்குமாடி குடியிருப்ைப இடிக்கும் உத்தரவில் விலக்கு அளிக்க வேண்டும். அடுக்கு மாடி குடியிருப்புகளை வேறு எதற்காகவாவது பயன்படுத்த  உத்தரவிடவேண்டும் என்று கூறினர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நீதிபதி அருண் மிஸ்ரா, நீதிமன்றத்தில் நீங்கள் இதுபோல் கூச்சல் போடக்கூடாது. இது நீதிமன்றம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நீதிமன்றத்தின் நேரத்தை  வீணடிக்கக்கூடாது.

சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டிடம் கட்டுவதை ஏற்க முடியாது. சமீபத்தில் கேரளா உட்பட பல பகுதிகளில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் நூற்றுக்கணக்கானோர் இறந்தனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எந்த காரணம் கொண்டும்  அடுக்குமாடி கட்டிடத்தை இடிக்கும் உத்தரவில் இருந்து ஒரு அடி கூட பின்வாங்க முடியாது  என்று கூறினார். தொடர்ந்து பிளாட் உரிமையாளர்கள் அனைவருக்கும் தலா ₹25 லட்சம் கண்டிப்பாக கொடுக்கவேண்டும். இதற்காக கட்டிட  உரிமைளையாளர்கள் 20 கோடியை பிணை தொகையாக கொடுக்க வேண்டும். அவர்களிடம் இருந்து பணத்தை வசூலிப்பதற்காக வங்கி கணக்குகள்  முடக்கி வைக்கப்பட்டுள்ள உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். இவ்வாறு  தெரிவித்தனர்.

Tags : owner ,demolition , All Flat Owner, Marud Apartments, Supreme Court
× RELATED கலெக்டர் தகவல் பழமையான கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும்