×

விளையாட்டு துளிகள்

* வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான் அணி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. முதல் ஒருநாள் போட்டி நவ. 6ம் தேதி நடைபெற உள்ளது. ஒருநாள் மற்றும் டி20  தொடர்களுக்கான ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று அறிவிக்கப்பட்டன. ரஷித் கான் கேப்டனாக நீடிக்கிறார்.
*  யு-19 உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் தென் ஆப்ரிக்காவில் 2020, ஜனவரி 17ம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 16 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாட உள்ளன. ஏ பிரிவு: இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, ஜப்பான். பி  பிரிவு: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நைஜீரியா. சி பிரிவு: பாகிஸ்தான், வங்கதேசம், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து. டி பிரிவு: ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா, யுஏஇ, கனடா.
* இங்கிலாந்தில் முதல் முறையாக நடைபெற உள்ள ‘100 பந்து கிரிக்கெட் தொடர்’ உலக அளவில் ரசிகர்களை வெகுவாகக் கவரும் என்று இலங்கை அணி முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கரா கணித்துள்ளார்.
* பகல்/இரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி ஒப்புக்கொள்வார் என்று கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
* எனது கிரிக்கெட் வாழ்க்கை 11 வயதில் தொடங்கியது. மாணவனாக இருந்தபோதே இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது. முதல் முறையாக வீரர்கள் தேர்வுக்கான டிரையல்சில் பங்கேற்றபோது நான்  தேர்வு செய்யப்படவில்லை. எனது ஆட்டத் திறனை இன்னும் மேம்படுத்த கடுமையாக உழைக்க வேண்டும் என்று தேர்வுக் குழுவினர் ஆலோசனை கூறினார்கள். அந்த சமயத்தில் அது மிகவும் ஏமாற்றமளித்தது’ என்று சாதனை நாயகன் சச்சின்  நினைவுகூர்ந்துள்ளார்.
* பிரெஞ்ச் ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் இந்திய வீராங்கனை சாய்னா நெஹ்வால் 20-22, 21-23 என்ற நேர் செட்களில் கொரியாவின் ஆன் செ யங்கிடம் போராடி தோற்றார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த  இப்போட்டி 49 நிமிடத்துக்கு நீடித்தது.
* எகிப்தின் கெய்ரோ நகரில் நடைபெறும் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா 9-11, 12-10, 8-11, 11-6, 11-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஹேலி மெண்டிசை  வீழ்த்தினார்.

Tags : team ,Afghanistan ,West Indies , West Indies, Afghanistan
× RELATED கேம் விளையாடியதை கண்டித்ததால் பள்ளி மாணவன் தற்கொலை