×

இங்கிலாந்துடன் டி20 விலகினார் வில்லியம்சன்

வெலிங்டன்: இங்கிலாந்து அணியுடன் நடக்க உள்ள டி20 தொடரில் இருந்து நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியுள்ளார். நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில்  விளையாடுகிறது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன. முதல் டி20 போட்டி நவம்பர் 1ம் தேதி கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது. இந்த நிலையில், இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம்  காரணமாக அவதிப்பட்டு வரும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக வேகப் பந்துவீச்சாளர் டிம் சவுத்தீ கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து லெவன் - இங்கிலாந்து மோதும் பயிற்சி டி20 ஆட்டம் லிங்கன், பெர்ட் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை காலை 6.30க்கு  தொடங்குகிறது. நியூசிலாந்து டி20 அணி: டிம் சவுத்தீ (கேப்டன்), கோலின் டி கிராண்ட்ஹோம், லோக்கி பெர்குசன் (1-3வது போட்டி), மார்டின் கப்தில், ஸ்காட் குகலெஜின், டேரில் மிட்செல், கோலின் மன்றோ, ஜிம்மி நீஷம், மிட்செல் சான்ட்னர்,  டிம் செய்பெர்ட் (விக்கெட் கீப்பர்), ஈஷ் சோதி, ராஸ் டெய்லர், பிளேர் டிக்னர், டிரென்ட் போல்ட் (4, 5வது போட்டி).



Tags : Williamson ,England , England, T20, Williamson
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது